"அமெரிக்காவுக்குள் யார் நுழைய வேண்டும்" - ட்ரம்ப்பின் புதிய புலம்பெயர் கொள்கை

பல வருடங்களாக அமெரிக்க சட்டம் அமெரிக்க குடும்பங்களுக்கு குடியுரிமை வழங்குவதில் குடும்ப அமைப்பை அடிப்படையாக கொண்டுள்ளது. க்ரீன் கார்ட் வழங்குவதில் அவர்களின் உறவு அடிப்படையில் சட்டம் வகுத்திருந்தது.

ட்ரம்பின் திட்டம் சட்ட ரீதியான தகவலின் படி 11 லட்சம் பேருக்கு வருடத்துக்கு குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளது.

Washington:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக புலம்பெயர்பவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள், வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்கள் என்று பார்த்து அனுமதி வழங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப்பின் புலம்பெயர்ந்தவர்களுக்கான கொள்கையில் முதன்மை ஆலோசகர்களாக ஜெரார்டு குஷ்னர் மற்றும் ஸ்டீபன் மில்லர் மற்றும் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹச்செட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2020 அதிபர் தேர்தலுக்கு புலர்பெயர்தல் கொள்கை அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் அதில் குடியரசுக்கட்சியின் நிலைப்பாடு சற்று விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பல வருடங்களாக அமெரிக்க சட்டம் அமெரிக்க குடும்பங்களுக்கு குடியுரிமை வழங்குவதில் குடும்ப அமைப்பை அடிப்படையாக கொண்டுள்ளது. க்ரீன் கார்ட் வழங்குவதில் அவர்களின் உறவு அடிப்படையில் சட்டம் வகுத்திருந்தது.

ட்ரம்பின் திட்டம் சட்ட ரீதியான தகவலின் படி 11 லட்சம் பேருக்கு வருடத்துக்கு குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால் அதில் அதிக திறன் கொண்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர்கள் அவர்களது மனைவி மற்றும் குழந்தைகளையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறது சட்டம்.

எல்லை பாதுகாப்பில் போதைப்பொருளுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. அதனால் தான் புலம்பெயர்தலை கட்டுப்படுத்துவதாக ட்ரம்ப் அரசாங்கம் கூறியுள்ளது.

குடியரசு கட்சியின் இலக்கு அதிபர் கொள்கையின் மூலம் புலம்பெயர்தலில் சீர்திருத்தம் கொண்டுவந்து மக்கள் மனநிலையில் இந்த சட்டத்தை நிறைவேற்றுவது என்று கூறியுள்ளது. 

ட்ரம்ப் இது குறித்த மிக பெரிய ஆவணத்தை வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. இது புலம்பெயர்தலில் முக்கியமான அம்சங்களை விளக்காது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

குடும்பங்கள் அல்லாமல் திறன் அடிப்படையில் புலம்பெய்ர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் என்ன வழிமுறைகளை கொண்டுள்ளன என்று குஷ்னர் தலைமையிலான குழு யோசித்து வருகிறது.

அமெரிக்காவில் புலம்பெயர்தல் 12 சதவிகிதம் என்ற அளவில் திறன் சார்ந்து உள்ளது. அதேசமயம் கனடா 63%, நியூசிலாந்து 57% என்ற அளவில் உள்ளன.

More News