This Article is From Feb 11, 2019

"2020ல் அமெரிக்க அதிபராக இருக்க மாட்டார் ட்ரம்ப்" - எலிசபெத் வாரன்

அமெரிக்க அதிபர் டரம்புக்கு எதிரான கருத்துகள் தொடர்ந்து வலுத்து வருகிறது. அந்த வரிசையில் எலிசபெத் வாரன் தனது எதிர்ப்பை மக்கள் மத்தியில் பதிவு செய்தார்.

ட்ரம்ப்பின் முதல் ஆட்சியில் பாதிக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் ட்ரம்பின் கட்சிக்கு எதிராக சிவில் வழக்குகள் பல நிலுவையில் உள்ளதை விவரித்தார் எலிசபெத் வாரன்.

அமெரிக்க அதிபர் டரம்புக்கு எதிரான கருத்துகள் தொடர்ந்து வலுத்து வருகிறது. அந்த வரிசையில் எலிசபெத் வாரன் தனது எதிர்ப்பை மக்கள் மத்தியில் பதிவு செய்தார். அதில் "2020ல் ட்ரம்ப் அதிபராக இருக்கமாட்டார். அவ்வளவு ஏன் சுந்திரமாக மக்களுடன் வாழமுடியாத நபராக இருப்பார்" என்று கூறினார்.

இதுதான் வாரன் முதல்முறையாக ட்ரம்பை தாக்கி பேசுவது. இதற்குமுன் லோவா வந்த வாரன், ட்ரம்ப் பெயரைக்கூட சொன்னதில்லை.

ஆனால், இந்த முறை ட்ரம்பை நேரடியாக தாக்கி பேசியுள்ளார். "எல்லா விஷயங்களிலும் ட்ரம்ப் மூக்கை நுழைப்பதை நிறுத்த வேண்டும்" என்றார்.

2020ம் ஆண்டுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான பிரசாரத்தை மாஸசெட்ஸில் 3500 ஆதரவாளர்கள் முன்னிலையில் துவங்கினார் வாரன். ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், கோரி புக்கர், கில்ப்ராண்ட் என பலரும் போட்டியில் களமிறங்குகிறார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு. அதிபருடன் பலருக்கு இந்த விஷயத்திக் தொடர்பு என பல குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் மீது வைத்தார் வாரன்.

ட்ரம்ப்பின் முதல் ஆட்சியில் பாதிக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் ட்ரம்பின் கட்சிக்கு எதிராக சிவில் வழக்குகள் பல நிலுவையில் உள்ளதை விவரித்தார்.

முல்லர் விசாரணையில் ட்ரம்புக்கு நெருக்கமானவர்கள் சிக்கி வருகிறார்கள். ரோஜர் ஸ்டோன் என்பவர் விசாரனை வளைத்தில் சிக்கினார். ட்ரம்ப் முல்லர் விசாரணையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

அதிபரை பதவி விலக வைப்பது, சிறைக்கு அனுப்புவது ஆகியவற்றை பற்றி சிறிதும் கவலையின்றி இருப்பதாகவும், இன்னும் நாட்டை இவரால் வருந்த வைக்கப்போவதில்லை என்றும் டெய்லர் தெரிவித்தார்.

"ட்ரம்ப் மீண்டும் வேட்பாளராக்கப்படுவாரா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது" என்று புக்கரும் தெரிவித்துள்ளார். இவர்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.