பிரபல நடிகருக்கும், பெண் தோழிக்கும் நிச்சயதார்த்தம்!! பிரபலங்கள் வாழ்த்து! #ViralPhotos

நடிகர் நிதினுடன் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா ட்விட்டரில் வாழ்த்துக் கூறியுள்ளார்.

பிரபல நடிகருக்கும், பெண் தோழிக்கும் நிச்சயதார்த்தம்!! பிரபலங்கள் வாழ்த்து! #ViralPhotos

நிதின் - ஷாலினி நிச்சயதார்த்த புகைப்படம்

பிரபல தெலுங்கு நடிகர் நிதினுக்கும் அவரது நீண்ட நாள் பெண் தோழி ஷாலினி ரெட்டிக்கும் இடையே ஐதரபாத்தில் இன்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

புகைப்படங்களை 36 வயதாகும் நடிகர் நிதின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நிதின் - ஷாலினி குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

புகைப்படங்களில் வெள்ளை நிற குர்தா, பைஜாமா உடையில் நிதின் மிக அழகாக காணப்படுகிறார். அவருக்கு ஏற்றாற்போல் ஷாலினி மஞ்சள் நிற லெஹங்கா மற்றும் இளம் பச்சை வண்ண துப்பட்டா அணிந்து பளிச்சென காட்சியளிக்கிறார். அவருக்கு வைரம் மற்றும் எமரால்டினால் ஆன கம்மல் மற்றும் நெக்லஸ் ஆகியவை அழகுக்கு அழகு சேர்க்கின்றன.
 

இந்த புகைப்படத்தை நிதின் பகிர, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். 
.

நிதினுடன் ஷாலினி செல்பி எடுப்பது போன்ற ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்னொரு புகைப்படத்தில் பாரம்பரிய உடையில் இரு குடும்பத்தினரும் நிச்சயதார்த்த சடங்குகளில் ஈடுபடும் காட்சி உள்ளது.

நிதினுக்கு பீஷ்மா படத்தில் அவருடன் நடித்த ராஷ்மிகா மந்தனா வாழ்த்துக் கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'வாழ்த்துக்கள் நிதின். உங்கள் நட்பு கிடைத்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். உங்களுக்கு அனைத்தும் கிடைக்க வாழ்த்துக்கள். உங்கள் இருவரையும் எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறியுள்ளார்.
 

தெலுங்கு நடிகரான நிதினுக்கு சால் மோகன் ரங்கா, அ ஆ, ஹார்ட் அட்டாக், இஷ்க், ஹீரோ, தில், துரோனா,அக்யாத், விக்டரி உள்ளிட்ட படங்கள் நல்ல பேரை தேடித் தந்தன. கடைசியாக அவர் நடித்த ஸ்ரீனிவாச கல்யாணம் கடந்த 2018-ல் வெளியானது. அவரது அடுத்த படமான பீஷ்மா விரைவில் திரைக்கு வருகிறது. 

Listen to the latest songs, only on JioSaavn.com