‘என்னைப் பற்றி எனக்கே புரியவைத்த இந்தியா…’- நெகிழும் வில் ஸ்மித்!

கடவுள் அனுபவங்களின் வழி கற்றுக் கொடுப்பார் என்று என் பாட்டி கூறுவார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘என்னைப் பற்றி எனக்கே புரியவைத்த இந்தியா…’- நெகிழும் வில் ஸ்மித்!

வில் ஸ்மித் பகிர்ந்த புகைப்படம் (Image courtesy: willsmith)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. இந்திய பயணம் குறித்த தன் அனுபவத்தை கூறியுள்ளார்.
  2. இந்த போஸ் 14 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது
  3. கடவுள் அனுவங்களின் வழி கற்றுக் கொடுப்பார் -வில் ஸ்மித்

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் இந்தியாவிற்கு பயணம் செய்து வருவது வழக்கம். அது போல் இந்தியாவின் மீது உள்ள தன் அன்பை பல நேரங்களில் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது ஆவணப் படப்பிடிப்பற்காக இந்தியாவிற்கு வந்த வில் ஸ்மித் தன்னுடைய இண்ஸ்டாரகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து இந்தியாவைப் பற்றிய தன் கருத்தினை கூறியுள்ளார். இந்தியாவின் பயண அனுபவம் கலை மற்றும் உலகின் உண்மை குறித்தான புதிய புரிதலை ஏற்படுத்துவதாக கூறியிருந்தார். இவரது கருத்திற்கு சில மணி நேரங்களில் 14 லட்சம் லைக்ஸ் இண்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கிடைத்துள்ளது.  

வில் ஸ்மித், “கடவுள் அனுபவங்களின் வழி கற்றுக் கொடுப்பார் என்று என் பாட்டி கூறுவார். இந்திய பயண அனுபவம் வண்ணங்கள், மக்கள், இயற்கை அழகு, கலை மற்றும் உலகின் உண்மை குறித்து புதிய  புரிதலை ஏற்படுத்தியது” என்று குறிப்பிட்டிருந்தார். 

வில் ஸ்மித்தின் இண்ஸ்டாகிராம் போஸ்டினை கீழே பார்க்கலாம்: 

வில் ஸ்மித் சில நாட்களுக்கு முன் இந்தியாவில் ஆட்டோவில் பயணம் செய்ததைக் குறித்து இண்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியிருந்தார். “நீங்கள் இந்தியாவை சுற்றிப்பார்க்க விரும்பினால்,  இதைத் தேர்ந்தெடுக்கலாம். இறுதியில் செலவும் அதிகமில்லை”என்று குறிப்பிட்டிருந்தார். 

வில் ஸ்மித் புனித் மல்ஹோத்ராவில் ஸ்டண்ட் ஆப் தி இயர் 2, அனியா பாண்டே, டைகர் ஷிராஃப் மற்றும் தாரா சுடரியா ஆகியவற்றில் நடித்துள்ளார். 

தற்போது, வில் ஸ்மித் அலாதீன் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................