This Article is From Jul 13, 2018

ட்விட்டர் நடவடிக்கையால், பிரபலங்களின் ஃபாலோவர்கள் எண்ணிக்கை 2% குறைந்தது

போலி கணக்குகள் மற்றும் சந்தேகப்படும்படியான நடவடிக்கைகள் உள்ள ட்விட்டர் கணக்குகளை, பாதுகாப்பு கருதி முடக்கி வருகிறது

ட்விட்டர் நடவடிக்கையால், பிரபலங்களின் ஃபாலோவர்கள் எண்ணிக்கை 2% குறைந்தது
SAN FRANCISCO:

போலி கணக்குகள் மற்றும் சந்தேகப்படும்படியான நடவடிக்கைகள் உள்ள ட்விட்டர் கணக்குகளை, பாதுகாப்பு கருதி அந்நிறுவனம் முடக்கி வருகிறது. இதனால் பயனாளர்களின் ஃபாலோவர்களின் எண்ணிக்கை குறையும் என்று ட்விட்டர் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் கீஹோல் என்ற சமூக வலைத்தள டேட்டா நிறுவனம் ட்விட்டரின் இந்த நடவடிக்கைக்கு பின் ஆய்வில் ஈடுபட்டது. அதில், உலக அளவில் 100 டாப் பிரபலங்களின் ட்விட்டர் ஃபாலோவர்களின் எண்ணிக்கை சராசரியாக 2% வரை குறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

ட்விட்டரில் உள்ள ஃபாலோவர்களின் எண்ணிக்கையை வைத்தே, விளம்பரங்கள் வழங்கப்படுவதால், இந்த எண்ணிக்கை குறைவு சில ட்விட்டர் பிரபலங்களை சற்று அதிருப்தி அடையச் செய்திருக்கலாம். மற்றவர்களுக்கு இது பெரிய விஷயமாக இல்லாவிட்டாலும், தங்களின் ஃபாலோவர் எண்ணிக்கையை பெருமையாக நினைப்பவர்களுக்கு, இது சற்று விரும்பத்தகாத செய்தியே.

இந்த நடவடிக்கையால், @ட்விட்டர் என்ற ட்விட்டரின் அதிகாரப்பூர்வ கணக்கின் எண்ணிக்கையே 12.4% குறைந்துள்ளது. டெக் ஜாம்பவான் இலான் மஸ்கின் ட்விட்டர் ஃபாலோவர்களி எண்ணிக்கை 0.3% குறைந்தது. அதாவது 71,000 ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்தது.

பிரபல இசை கலைஞரான, கேட்டி பெர்ரியின் கணக்கில் இருந்து 28 லட்சம் ஃபாலோவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் ட்விட்டரின் இந்த நடவடிக்கை பல தரப்பிலும் நன்மதிப்பை சம்பாதித்துள்ளது.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.