This Article is From Sep 06, 2018

சீன போர்கப்பல்களை டிராக் செய்ய உதவும் அமெரிக்காவின் அதி ரகசிய தொழில்நுட்பம்

இந்திய போர் விமானம், போர் கப்பல், நீர் மூழ்கி ஆகியவற்றுக்கு என்கிரிப்ட் செய்து தகவல் அனுப்ப இருக்கிறது அமெரிக்கா

சீன போர்கப்பல்களை டிராக் செய்ய உதவும் அமெரிக்காவின் அதி ரகசிய தொழில்நுட்பம்
New Delhi:

அமெரிக்க போர் கப்பல் அல்லது போர் விமானங்கள், சீன போர் கப்பல் அல்லது நீர் மூழ்கி கப்பல் இருப்பதை கண்டறிந்தால், அந்த தகவலை அப்பகுதியில் இருக்கும் இந்திய போர் விமானம், போர் கப்பல், நீர் மூழ்கி ஆகியவற்றுக்கு என்கிரிப்ட் செய்து தகவல் அனுப்ப இருக்கிறது அமெரிக்கா.

சீன கப்பல் இருக்கும் இடம் மற்றும் வேகத்தை மட்டும் அல்ல, அந்த கப்பலின் நேரலை வீடியோவும் இந்தியாவுக்கு கிடைக்கும். அமெரிக்கா இந்தியா இடையே ராணுவ தகவல்களை பரிமாறிக் கொள்ளும் தொழில்நுட்பம் சென்ட்ரிக்ஸ். இந்த சென்ட்ரிக்ஸில் மூலம், இந்திய கடல்படை தகவல்களை பெறும்.

இந்த சென்ட்ரிக்ஸ் தொழில்நுட்பத்தை இந்தியா பயன்படுத்த அனுமதிக்கப்படுவதற்கு, COMCASA என்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதே காரணம். இந்த ஒப்பந்தம் மூலம் இரண்டு ராணுவங்களும் இணைந்து செயல்பட முடியும்.

ராணுவ தொழில்நுட்பம் என்ற இடத்தில் நின்று பார்த்தால், சென்ட்ரிக்ஸ் மூலம் இரு நாட்டு ராணுவமும் இணைந்து தாக்குதல் நடத்த முடியும். இந்த COMCASA ஒப்பந்தம் அதோடு நின்று விடவில்லை. கடல் பகுதி பாதுகாப்புக்காக இந்தியா வாங்க இருக்கும் ஆயுதம் ஏந்திய ட்ரோன்களில், அமெரிக்காவின் உயர் தர தொழில்நுட்ப பாகங்கள் பயன்படுத்தப்படவும் அனுமதி அளிக்கிறது இந்த ஒப்பந்தம். ஜி.பி.எஸ், நண்பனா எதிரியா என கண்டறியும் தொழில்நுட்பம், சிக்னல்கள் ஹேக் செய்யப்படுவது தடுக்கும் தொழில்நுட்பம் ஆகியவை அமெரிக்க தொழில் நுட்ப ஹார்டுவேர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மிக பலமான என்கிரிப்ஷன் மூலம் தரவுகள் பரிமாற்றம், என்கிரிப்ஷனுக்கான செக்யூரிட்டி கீ ஆகியவற்றை இந்திய தொழில்நுட்பம் மூல உருவாக்க இருக்கின்றனர்.

d920q008

இத்தனை நல்ல அம்சங்கள் இருந்தாலும், இதில் சில சிக்கல்களும் உள்ளன. பாதுகாப்பாக தரவுகளை அனுப்ப உதவும் அமெரிக்காவின் தொழில்நுட்பத்தில், தனி சேனல் இருக்கும் என்றும், அதன் வழியாக அமெரிக்கா இந்திய தகவல்களை கண்காணிக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், ஆண்டுக்கு ஒரு முறை அமெரிக்கா, இந்த ட்ரோன்களை சோதனை செய்யும் என்று COMCASA ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படி சோதிப்பது இந்தியாவின் உரிமையையும், இறையான்மையையும் பாதிக்கும் எனவும் கருதப்படுகிறது.

ஆனால், இதற்கு அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்கா இந்தியா அனுமதியின்றி, இந்த ட்ரோன்களை டிராக் செய்ய முடியாது என்றும், ஆண்டுக்கு ஒருமுறை சோதனை செய்வதற்கான காரணம், அமெரிக்காவின் தொழில்நுட்பங்கள், அனுமதியின்றி மாற்றி அமைக்கவோ, அதன் மாதிரியாக வேறு ஹார்டுவேர்களை உருவாக்கவோ கூடாது என்பது தான் என்று கூறியுள்ளது.
 

.