This Article is From Aug 30, 2019

NEWS FLASH: இன்றைய முக்கியச் செய்திகள்!

உள்ளூர் முதல் உலகம் வரையிலான முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள என்.டி.டி.வி. தமிழ் இணைய தளத்துடன் இணைந்திருங்கள்.

NEWS FLASH: இன்றைய முக்கியச் செய்திகள்!

உள்ளூர் முதல் உலகம் வரையிலான முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள என்.டி.டி.வி. தமிழ் இணைய தளத்துடன் இணைந்திருங்கள்.

Aug 30, 2019 17:41 (IST)
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2019-20 முதல் காலாண்டில் 5 சதவீதமாக உள்ளது.
Aug 30, 2019 16:45 (IST)
கனரா வங்கியும், சிண்டிக்கேட் வங்கியும் இணைக்க முடிவு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Aug 14, 2019 10:47 (IST)
சுதந்திர தினத்தன்று பாக். ராணுவத்தால் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர் அபிநந்தன் வர்தமனுக்கு துணிச்சலுக்கான வீர் சக்ரா விருது வழங்கப்படவுள்ளது : ஏ.என்.ஐ
Aug 05, 2019 11:26 (IST)
காஷ்மீர் பதற்றம்: சிறப்பு சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார் அமித்ஷா!
Aug 05, 2019 11:15 (IST)
காஷ்மீர் பதற்றம்: அமித்ஷாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கடும் அமளி!
Aug 05, 2019 11:07 (IST)
காஷ்மீர் பதற்றம்: நாடாளுமன்றத்தில் காலை 11 மணி அளவில் உரையாற்ற உள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!
Jul 29, 2019 12:05 (IST)
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் எடியூரப்பா
Jul 29, 2019 10:12 (IST)
எழுவர் விடுதலை: அற்புதம் அம்மாளுடன் அமித்ஷாவை சந்திக்க உள்ளார் திருமாவளவன்!
Jul 29, 2019 09:42 (IST)
கலிபோர்னியாவில் நடந்த உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு- 3 பேர் பலி என ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தகவல்!
Jul 19, 2019 12:14 (IST)
உ.பி-யில் நில பிரச்னை தொடர்பாக சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினரை நேரில் பார்க்க சென்ற பிரியங்கா காந்தி தடுத்தி நிறுத்தம்!
Jul 08, 2019 15:33 (IST)
'கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணி ஆட்சி கவிழாது'' - NDTV-க்கு முதல்வர் குமாரசாமி பேட்டி
Jul 03, 2019 13:31 (IST)
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு!
Jul 02, 2019 15:00 (IST)
உலகக் கோப்பை 2019: கேதார் ஜாதவ் மற்றும் குல்தீப் யாதவுக்கு பதில், தினேஷ் கார்த்திக் மற்றும் புவ்னேஷ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்!
Jul 01, 2019 13:34 (IST)
காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகல்
Jul 01, 2019 11:57 (IST)
தமிழக சட்டப்பேரைவியிலிருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது!
Jun 19, 2019 16:43 (IST)
பெருவிரல் காயம் காரணமாக உலகக் கோப்பையில் ஷிகர் தவான் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு
Jun 12, 2019 11:21 (IST)
நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுக-வில் இணைந்தார். முதலமைச்சரை நேரிதல் சந்தித்துத் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
Jun 10, 2019 09:44 (IST)
ஞானப்பித்தர் விருது வாங்கிய பழம்பெரும் நடிகர் கிரிஷ் கர்னாட் இன்று காலை காலமானார்!
Jun 08, 2019 11:24 (IST)
அதிமுக-வுக்கு வலிமையான தலைமை தேவை: எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ
May 31, 2019 13:15 (IST)
அமித்ஷாவுக்கு உள்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை, நிர்மாலவுக்கு நிதித்துறை, ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கீடு!
May 10, 2019 10:47 (IST)
அயோத்தி வழக்கு: ஆக.15 வரை மத்தியஸ்தர குழுவுக்கு அவகாசம்
May 09, 2019 11:02 (IST)
மத்திய அரசு நிராகரித்த நிலையில் மேலும் 2 பேரை நீதிபதிகளாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை
May 08, 2019 09:31 (IST)
ப்ளஸ் ஒன் (+1) தேர்வு முடிவுகள் வெளியானது. ரிசல்ட்டை http://www.tnresults.nic.in/, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.
May 04, 2019 18:19 (IST)
டெல்லியில் நடந்த பேரணியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலின் கன்னத்தில் ஒருவர் அறை விட்டதால் பரபரப்பு
Apr 30, 2019 15:35 (IST)
உச்ச நீதிமன்றம் கண்டித்ததை தொடர்ந்து மோடியை திருடன் என பேசிய விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டார்.
Apr 27, 2019 14:09 (IST)
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழ்ழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது எனத் தகவல்!
Apr 23, 2019 16:28 (IST)
இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு!
Apr 22, 2019 17:59 (IST)
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் 7 பேர் இந்தியர்கள் : வெளியுறவு அமைச்சர் தகவல்
Apr 22, 2019 16:46 (IST)
கொழும்பு சர்ச் அருகே செயலிழக்கம் செய்ய முற்பட்டபோது வெடிகுண்டு வெடித்தது
Apr 21, 2019 12:07 (IST)
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக இந்தியர்கள் +94777903082 +94112422788 +94112422789 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Apr 21, 2019 11:07 (IST)
இலங்கையில் பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 24 பேர் உயிரிழப்பு - 280 பேருக்கு காயம்
Apr 17, 2019 19:13 (IST)
சென்னையை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் நடந்த சோதனையில் 1,300 கிலோ தங்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல்
Apr 16, 2019 18:41 (IST)
கர்நாடகாவில் பிரசாரத்தின்போது மர்ம பெட்டி மோடியின் ஹெலிகாப்டரில் இருந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
Apr 15, 2019 15:24 (IST)
கோலி, ரோகித், தவான், கே.எல்.ராகுல், விஜய் ஷங்கர், தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப், புவ்னேஷ்வர் குமார், பும்ரா, ஹர்திக், ஜடேஜா, ஷமி: உலகக் கோப்பைக்கான இந்திய அணி!
Apr 13, 2019 17:04 (IST)
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார்.
Apr 12, 2019 14:43 (IST)
தமிழ்நாட்டை தமிழர்கள்தான் ஆள வேண்டும்: சேலத்தில் ராகுல் காந்தி பரபரப்பு பிரசாரம்!
Apr 11, 2019 12:13 (IST)
தமிழகத்தில் 5.99 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
Apr 09, 2019 16:39 (IST)
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்
Mar 27, 2019 13:12 (IST)
பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்
Mar 27, 2019 12:57 (IST)
கோவா முதல்வர், துணை முதல்வரான சுதின் தவாலிகரின் பதவி நீக்கம் செய்தார். தவாலிகர் கட்சியிலிருந்து 2 எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வில் இணைந்தவுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: பிடிஐ தகவல்
Mar 27, 2019 11:44 (IST)
'முக்கியத் தகவலுடன்' நாட்டு மக்களிடம் உரையாட உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி!
Mar 26, 2019 11:58 (IST)
அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Mar 22, 2019 11:30 (IST)
பாலகோட் தாக்குதல் குறித்து காங்கிரஸ் கேள்வியெழுப்பியதை அடுத்து, பிரதமர் மோடி, 'நமது ராணுவத்தை எதிர்கட்சிகள் அவமானப்படுத்துகின்றன' என்று விமர்சித்துள்ளார்.
Mar 20, 2019 15:06 (IST)
பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு இந்தியாவிலிருந்து தப்பியோடிய தொழிலதிபர் நிரவ் மோடி கைது செய்யப்பட்டார் எனத் தகவல்!
Mar 14, 2019 11:32 (IST)
தமிழகம் முழுவதும் பேனர், கட்-அவுட் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது எனத் தகவல்!
Mar 13, 2019 13:53 (IST)
எழுவர் விடுதலை குறித்து நீதிமன்ற உத்தரவுப்படியை நடப்போம்; நாங்கள் மன்னிக்கும் மனோபவாம் கொண்டவர்கள்- ராகுல் பேச்சு
Mar 13, 2019 13:49 (IST)
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஊழல் குறித்து விசாரணை செய்வோம், மோடி குற்றவாளி என நிரூபிக்கப்படுவார்- ராகுல் காந்தி பேச்சு
Mar 12, 2019 16:56 (IST)
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு: சிபிஐ-க்கு விசாரணையை மாற்ற தமிழக அரசு முடிவு எனத் தகவல்
Mar 12, 2019 14:33 (IST)
பெண்களை தவறான வழிக்கு அழைத்த வழக்கு: நிர்மலா தேவிக்கு ஜாமீன் எனத் தகவல்!
Mar 12, 2019 14:05 (IST)
பொள்ளாச்சி கொடூரம்: தமிழக காவல் துறை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது!
Mar 11, 2019 12:40 (IST)
டெல்லியில் அரசு அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - 3 வாகனங்களுடன் தீயணைப்பு பணிகள் தீவிரம்
Mar 06, 2019 17:40 (IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் : பிரதமர் மோடி அறிவிப்பு
Mar 06, 2019 16:03 (IST)
தே.ஜ.கூ பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!
Mar 06, 2019 14:12 (IST)
வண்டலூரில் தே.ஜ.கூ பொதுக் கூட்டம்; மேடையில் விஜயகாந்த், ஜி.கே.வாசன் புகைப்படங்கள்!
Mar 06, 2019 14:04 (IST)
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி: ஓ.பி.எஸ் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி
Mar 06, 2019 12:44 (IST)
தேமுதிக-வுக்கு 4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக தரப்பு முடிவு எனத் தகவல்!
Mar 05, 2019 13:23 (IST)
திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு 1 லோக்சபா & 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டதாக தகவல்!
Mar 05, 2019 13:14 (IST)
மதிமுக-வுக்கு ராஜ்யசபா சீட் தர திமுக முடிவு எனத் தகவல்; மீண்டும் வைகோ எம்.பி-யாக தேர்வு செய்ய வாய்ப்பு!
Mar 05, 2019 13:12 (IST)
நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக திமுக- மதிமுக இடையில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது!
Mar 05, 2019 12:54 (IST)
பாஜக-வின் அதிகாரபூர்வ இணையதளமான https://www.bjp.org/ முடக்கப்பட்டுள்ளது!
Mar 04, 2019 13:55 (IST)
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட திமுக எம்.பி கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்!
Mar 02, 2019 18:34 (IST)
பாகிஸ்தான் அதிகாரிகளால் அபிநந்தன் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல்.
Mar 01, 2019 16:05 (IST)
நாட்டின் பாதுகாப்பு குறித்து இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் கலந்துரையாடியுள்ளார் ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Mar 01, 2019 15:39 (IST)
தமிழகத்திலிருந்து விமானப்படையில் உள்ள விங் கமாண்டர் அபினந்தன் குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்கிறான்: பிரதமர் மோடி பேச்சு!
Feb 28, 2019 16:48 (IST)
எங்கள் பிடியில் இருக்கும் இந்திய விமானியை நாளை விடுவிப்போம்: பாக். பிரதமர் இம்ரான் கான் தகவல்
Feb 28, 2019 15:06 (IST)
பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானியை திருப்பியனுப்ப உறுதியளிக்கப்படவில்லை. அவர் பத்திரமாக அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கிறோம்: அரசு தரப்பு தகவல்
Feb 28, 2019 14:42 (IST)
ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை ஒதுக்கியது செல்லும் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு!
Feb 28, 2019 13:02 (IST)
இந்தியா ஒன்றாக நிற்கும். இந்தியா ஒன்றாக உழைக்கும். இந்தியா ஒன்றாக வளரும். இந்தியா ஒன்றாக போராடும். இந்தியா ஒன்றாக வெற்றி பெறும்- பிரதமர் மோடி உரை
Feb 28, 2019 12:46 (IST)
இந்தியா ஒரே நாடாக போராடும், இந்தியா ஒரே நாடாக வெற்றி பெறும்: பிரதமர் மோடி பாஜக தொண்டர்கள் முன்னிலையில் பேச்சு
Feb 27, 2019 15:20 (IST)
ஹெலிகாப்ட்டர் விபத்தில் நேபாள சுற்றுலாத் துறை அமைச்சர் உள்ளிட்ட 6 பேர் பலி: ஏஎன்ஐ தகவல்!
Feb 27, 2019 15:12 (IST)
விமான நிலையங்களை மூடச் சொல்லி கொடுக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்பட்டது!
Feb 27, 2019 14:24 (IST)
டெல்லிக்கு வடக்கே வான் மார்க்கமான அனைத்துப் பயணம் ரத்து என பிடிஐ செய்தி நிறுவனம் தகவல்!
Feb 26, 2019 10:25 (IST)
குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி சென்னை அண்ணா அறிவாலயம் வருகை எனத் தகவல்!
Feb 23, 2019 13:08 (IST)
தி.க-வின் அடுத்த தலைவர் கலி பூங்கன்றன்: கி.வீரமணி அறிவித்துள்ளதாக தகவல்
Feb 22, 2019 13:36 (IST)
விஜயகாந்த் இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாக கூறப்படுகிறது!
Feb 22, 2019 13:10 (IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்
Feb 22, 2019 11:50 (IST)
'முதலில் நலம் விசாரித்தது விஜயகாந்த்தான்!'- செய்தியாளர்கள் சந்திப்பில் உருகிய ரஜினி
Feb 21, 2019 16:38 (IST)
மார்ச் 1-ம்தேதி திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு
Feb 21, 2019 14:59 (IST)
கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுகவுக்கு திமுக அழைப்பு
Feb 21, 2019 11:39 (IST)
விஜயகாந்தை சந்திக்கிறார் தமிழக காங். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்?
Feb 21, 2019 10:08 (IST)
இன்னும் சற்று நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. குழு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது
Feb 21, 2019 09:58 (IST)
கூட்டணியில் சேர மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சிக்கு திமுக அழைப்பு
Feb 20, 2019 10:58 (IST)
சோனி எரிக்சன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அனில் அம்பானி குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்!
Feb 19, 2019 13:56 (IST)
Breaking: இந்தியா தாக்கினால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்: பாக்., பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை
Feb 19, 2019 12:15 (IST)
பெங்களூருவில் 2 விமானப் படை விமானங்கள் விபத்துக்கு உள்ளானதாக தகவல்!
Feb 19, 2019 11:39 (IST)
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல்
Feb 19, 2019 11:17 (IST)
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் பாஜக பேச்சுவார்த்தை
Feb 19, 2019 11:17 (IST)
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது!
Feb 18, 2019 13:26 (IST)
ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தளபதி கமரான் கொல்லப்பட்டார்
Feb 18, 2019 10:45 (IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது எனத் தகவல்!
Feb 12, 2019 13:32 (IST)
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாரிகட்டில் கார் மோதியதால் பதற்றம், ஏஎன்ஐ தகவல்
Feb 11, 2019 12:59 (IST)
''ரூ. 2,000 சிறப்பு நிதியால் 60 லட்சம் குடும்பங்கள் பலன் பெறும்'' : முதல்வர்
Feb 11, 2019 12:23 (IST)
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி : முதல்வர் அறிவிப்பு
Feb 06, 2019 16:49 (IST)
அமலாக்கத் துறை விசாரணைக்கு கணவர் ராபர்ட் வத்ரா சென்ற பிறகு, மனைவி பிரியங்கா காந்தி NDTV-யிடம், 'என் கணவரோடு துணை நிற்பேன்' என்றார்!
Feb 01, 2019 21:09 (IST)
போட்டி தேர்வுகளில் நெகட்டிவ் மதிப்பெண்களை கணக்கிடக்கூடாது: உயர்நீதிமன்றம்
Feb 01, 2019 12:36 (IST)
ஆண்டு வருமானம்: 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது!
Feb 01, 2019 12:24 (IST)
''வருமான வரி ரிட்டன் 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு பணம் திருப்பி அளிக்கப்படும்''
Jan 29, 2019 09:26 (IST)
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார். அவருக்கு வயது 88.
Jan 27, 2019 12:44 (IST)
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
Jan 25, 2019 12:34 (IST)
.