இணையத்தில் வலம் வரும் க்யூட்டான சிறுவனின் வீடியோ

அந்த வீடியோவில் சிறுவன் மேட், “நான் மலம் கழிக்கவில்லை. சிறுநீர்தான் கழித்தேன்” என்று மீண்டும் மீண்டும் கூறுகிறான்.

இணையத்தில் வலம் வரும் க்யூட்டான சிறுவனின் வீடியோ

இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் 27 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக்கில் டேனி டிவிடோ என்ற நபர் தன் மகன் பேசும் வீடியோ ஒன்றினை வெளியிட்டார். அது சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை நடிகை வித்யா பாலன் பகிர்ந்துள்ளார். இரண்டு வயதான மேட் கழிப்பறையில் அமர்ந்து கொண்டு தனது தந்தை கிரேக்குடன் உரையாடுகிறார். 

அந்த வீடியோவில் சிறுவன் மேட், “நான் மலம் கழிக்கவில்லை. சிறுநீர்தான் கழித்தேன்” என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார். சிரித்து சிரித்து அப்பாவுக்கு கண்ணீர் வர உடனே சிறுவன் “அப்பா சோகமாகி விட்டாயா...?” என்று கேட்க அப்பா கண்ணீரை துடைத்து விட்டு இல்லை “நான் சோகமாக இல்லை. மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்” என்று கூறுகிறார். சிறுவனோ திரும்பத் திரும்ப “நான் மலம் கழிக்கவில்லை. சிறுநீர்தான் கழித்தேன்” என்று கூறுகிறான். 

இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் 27 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். 

நடிகை வித்யா பாலன் பகிர்ந்ததும் பலரும் இதை லைக் செய்துள்ளனர். சிலர் இந்த சிறுவனை கண்டு “க்யூட்னஸின் உச்சம்” என்று பாராட்டியுள்ளனர். 

டபுள்யூ.வி நியூஸிற்கு பேசிய மேட்டின் பெற்றோர் சிறுவன் எப்படி வேடிக்கையான குரலைக் கொண்டு வந்தான் என்பது தெரியாது என்று கூறியிருந்தனர். 

Click for more trending news


More News