This Article is From Jul 06, 2019

காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம்! ராகுல் காந்தி ஆப்சென்ட்!!

ராகுல் காந்தியின் ராஜினாமா, கர்நாடக அரசியல் சிக்கல் என முக்கியமான பிரச்னைகள் காங்கிரஸ் கட்சியை சூழ்ந்துள்ளன.

காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம்! ராகுல் காந்தி ஆப்சென்ட்!!

அடுத்த தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று ராகுல் காந்தி அறிவித்து சென்று விட்டார்.

New Delhi:

காங்கிரசில் அடுத்த தலைவரை தேர்வு செய்வது தொடர்பான கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி கலந்து கொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் காங்கிஸ் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த உயர்மட்ட குழு கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியுள்ளது. கூட்டத்தின்போது கர்நாடகத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமை குறித்து பேசப்பட்டது. 

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 2 பேரில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுஷில் குமார் ஷிண்டே அல்லது மல்லிகார்ஜுன கார்கேவுக்குத்தான் அடுத்த காங்கிரஸ் தலைவராக ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

77 வயதாகும் சுஷில் குமார் ஷிண்டே மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வராகவும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். கார்கேவை விட ஷிண்டேவுக்குத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியின் தலித் முகமாகவும் சுஷில் குமார் பார்க்கப்படுகிறார். 

76 வயதாகும் மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவினார். காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய அமைச்சராக கார்கே பலமுறை பொறுப்பு வகித்திருக்கிறார். 
 

.