எழுவர் விடுதலை: அற்புதம் அம்மாள் தலைமையில் தொடர் உண்ணாவிரதம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
எழுவர் விடுதலை: அற்புதம் அம்மாள் தலைமையில் தொடர் உண்ணாவிரதம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தலைமை தாங்கியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம், சேப்பாக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தனது முகநூல் பக்கத்தில், ‘பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் அவர்கள் உடனே நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஏழு பேர் பங்கேற்கும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டு ஒருநாள் மட்டும் ஏழு பேர் பங்கேற்கும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி 7 பேர் பங்கேற்கும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டமானது இன்று காலை முதல் பேரறிவாளன் அவர்களின் தாயார் அற்புதம் அம்மாள் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுவர் விடுதலை குறித்து, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். அவரின் இந்த செயலற்றத் தன்மைக்கு பல தரப்பினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................