பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட ஊடகக் கொள்கையில் மாற்றம் வேண்டும் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பரிந்துரை

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களின் பங்கு என்ன என்பதை எடுத்துரைத்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

“ஊடகங்கள் அமைதியாக இருந்தால் பயங்கரவாதம் முடிவுக்கு வரும்” என்றார்.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. இது எல்லாவுமே புரிதலின் அடிப்படையில்தான் உள்ளது
  2. “ஊடகங்கள் அமைதியாக இருந்தால் பயங்கரவாதம் முடிவுக்கு வரும்”
  3. புலனாய்வு அமைப்புகளும் தங்கள் ஊடகக் கொள்கையை மாற்றவேண்டும்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களின் பங்கு என்ன என்பதை எடுத்துரைத்தார். ஊடகங்கள் “பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான முக்கிய உறுப்பாக” செயல்படுகிறது. அதனால், பயங்கரவாத விசாரணை மற்றும் எச்சரிக்கைகள் என வரும்போது ஊடகங்கள் புரிதலுடன் செயல்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

“இது எல்லாவுமே புரிதலின் அடிப்படையில்தான் உள்ளது. நம்மில் பெரும்பாலோர் ஊடகங்களிடம் ஏதும் சொல்லாததால், அவர்கள் ஊகித்து செய்திகளை எடுத்துச் செல்கிறார்கள். அந்த செய்தி, சமூகத்தை பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு பதிலாக சமூகத்தை அச்சுறுத்துகிறது” என்று அறையில் கூடுயிருந்த மூத்த காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் கூறினார். அன்றாடம் பயங்கரவாதம் எதிர்ப்பு நடவடிக்கைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் விதத்தை கூறினார்.

பிரிட்டனின் முன்னால் பிரதம மார்கரெட் தாட்சரை மோற்கோள் காட்டி “ஊடகங்கள் அமைதியாக இருந்தால் பயங்கரவாதம் முடிவுக்கு வரும்” என்றார். 

தீவிரவாதிகள் ஏன் கொல்கிறார்கள்? அவர்கள் விளம்பரத்திற்காக கொலை செய்கிறார்கள். 10 பேர் கொல்லப்பட்டால், அதைப் பற்றி யாரும் தெரிந்து கொள்ளாவிட்டால்  யாரும் பயப்பட மாட்டார்கள் என்று டோவல் பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களின் தலைவர்களின் மாநாட்டில் உரையாற்றிய போது கூறினார்.

“ஊடகங்கள் எழுதவில்லை என்றால் யாரும் தெரிந்து கொள்ள மாட்டார்கள். ஒரு பயங்கரவாதியால் பள்ளிக்குச் செல்லும் ஒருவரின் மகன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டால், அது ஊடகங்களால் தெரிவிக்கப்படாவிட்டால், மக்கள் தெரிந்து கொள்ள மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

இந்த சூழலில் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளும் தங்கள் ஊடகக் கொள்கையை மாற்ற வேண்டும் என்றார். 

“பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் புரிந்துணர்வு திறன் ஒரு முக்கிய பகுதியாகும்” என்று அவர் கூறினார்.

ஊடகங்களை கையாள்வதற்கு பயிற்சி பெற்ற ஒருவர் இருக்க வேண்டும். என்ன நடந்தது, அதை சமாளிக்க என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை அவர்களிடம் சொல்லுங்கள். ஊடகங்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கம் அவர்களை நம்பிக்கையுடன் எடுத்துக் கொள்ளும் போதெல்லாம் அவர்கள் மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். ஏனென்றான் சமூகம் சரியானதை அறிந்து கொள்ளவே ஊடகங்கள் விரும்புகின்றன” என்று டோவல் வலியுறுத்தினார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................