தேர்வுக்கான வயது வரம்பு விவகாரம்! TNPSC டி.என்.பி.எஸ்.சி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!!

தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் பணிகளுக்கான தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமான TNPSC டி..என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தற்போது சட்டப்படிப்பு முடித்தவர்கள் என்றால் 27 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் வழக்கறிஞர் தொழிலில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கான வயது வரம்பு விவகாரம்! TNPSC டி.என்.பி.எஸ்.சி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!!

திருச்சியைச் சேர்ந்த 37 வயது வழக்கறிஞர் டி.ரவிச்சந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Chennai:

நீதிபதிகள் தேர்வு விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வலியுறுத்தி TNPSC டி.என்.பி.எஸ்.சி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக அக்டோபர் 21-ம்தேதிக்குள் TNPSC விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி TNPSC சார்பாக தமிழகத்தில் அரசுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு விரைவில் TNPSC யால் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிக்கை கடந்த மாதம் 9-ம்தேதி வெளியானது.

இதன்படி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் புதிதாக சட்டம் படித்த மாணவர்கள் என்றால் 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்றவர்கள் என்றால் அவர்கள் வழக்கறிஞர் தொழிலில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராக இருத்த வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால், நீதிபதிகளாகும் எண்ணத்தில் இருப்பவர்கள், இந்த வயது வரம்புக்குள் வராமல் போகிறது. இந்த விதிமுறையை மாற்றி அமைக்க கோரி, திருச்சியை சேர்ந்த 37 வயது வழக்கறிஞர் ரவிச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் கடந்த 2017 நவம்பரில்தான் சட்டப்படிப்பை முடித்துள்ளார். இதனால் அவரால் நீதிபதிகள் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ரவிச்சந்திரன் தனது மனுவில், மற்ற மாநிலங்களில் வயது வரம்பு 40 வரை இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் உச்சபட்ச வயது வரம்பு 27-ஆக நிர்ணயம் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு சென்ன உயர் நீதிமன்ற செயல் தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சி. சரவணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள் இதுதொடர்பாக வரும் 21-ம்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று TNPSC, தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
More News