This Article is From Jan 27, 2020

TNPSC முறைகேடு விவகாரம் : 'குற்றவாளிகளின் சொத்துகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும்'

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் 2 தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதுடன், முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றிருந்தனர். இது பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

TNPSC முறைகேடு விவகாரம் : 'குற்றவாளிகளின் சொத்துகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும்'

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் சிக்கும் அதிகாரிகளின் சொத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும்  என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் 2 தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதுடன், முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றிருந்தனர். இது பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 

விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. 

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தரப்பிலிருந்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து ராமநாதபுர மாவட்டத்தில் 9 தேர்வு மையங்களை ரத்து செய்ததுடன், அங்கு தேர்வு எழுதிய 99  பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே, டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் சிக்கும் அதிகாரிகளின் சொத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும்  என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், வணிவரி ஆய்வாளர், டி.எஸ்.பி., மேஜிஸ்திரேட் என ஒவ்வொரு பதவிகளுக்கு ரூ. 1 கோடி வரையில் பேரம் பேசப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதவிகளை வாங்கியவர்கள், கொடுத்தவர்கள், அந்த பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் என இவர்களது சொத்துக்களை நாட்டுமையாக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற முறைகேடு நடைபெறாமல் அரசு தடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு வேல் முருகன் தனது பேட்டியில் கூறியுள்ளார். 

.