This Article is From Nov 20, 2019

TNPSC Jobs: 1,141 கால்நடை Assistant Surgeon காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!!

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சை ஆகிய இடங்களில் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. நேர்முகத்தேர்வு 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். 

TNPSC Jobs: 1,141 கால்நடை Assistant Surgeon காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!!

SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs மற்றும் விதவைகளுக்கு வயது உச்ச வரம்பு 58 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையமான TNPSC நடத்தும் 1,141 கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான (Assistant Surgeon) காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே இதேபோன்ற 636 பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட்டன. அவை இந்த அறிவிப்பில் சேராது என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. 

B.V.Sc., படிப்பு முடித்தவர்கள் Assistant Surgeon தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 17-ம்தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs  மற்றும் விதவைகளுக்கு வயது உச்ச வரம்பு 58 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினருக்கு உச்ச வரம்பு 30 வயது. 

விண்ணப்பிப்போர் கால்நடை சிகிச்சை பயிற்சியாளர்கள் கவுன்சில் சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். இதேபேன்று பள்ளிப்படிப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

முதலில் எழுத்துத் தேர்வும், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வும் நடத்தப்படுகிறது. Animal Husbandry and Veterinary Science and General Studies of degree standard ஆகிய பாடப்பிரிவின் கீழ் 500 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். 

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சை ஆகிய இடங்களில் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. நேர்முகத்தேர்வு 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். 
 

.