This Article is From Aug 30, 2019

டி.என்.பி.எஸ்.சி. (TNSPC) குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற சூப்பர் டிப்ஸ்!!

TNPSC Group 4 tips: நாளை மறுதினம் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் (Hall Ticket) வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவையாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்டவற்றில் 6,491 காலிப்பணியிடங்களுக்காக தேர்வு நடத்தப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி. (TNSPC) குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற சூப்பர் டிப்ஸ்!!

TNPSC Group 4: காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணியுடன் தேர்வு முடிகிறது.

டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) குரூப் 4 எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1-ம்தேதி நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
செப்டம்பர் 1-ம்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு தேர்வு நிறைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் (Hall Ticket) அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் 200 கேள்விகளைக் கொண்டதாக எழுத்துத் தேர்வு அமையும். பொதுப்பிரிவில் இருந்து 75 கேள்விகளும், 25 கேள்விகள் ஆப்டிடியூட் மற்றும் மனத்திறன் பிரிவில் இருந்தும் கேட்கப்படும். மீதம் உள்ள 100 கேள்விகள் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவில் இருந்து கேட்கப்படும். 

வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவையாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்டவற்றில் 6,491 காலிப்பணியிடங்களுக்காக தேர்வு நடத்தப்படுகிறது. 

டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது குறித்து அரசுத்தேர்வு வல்லுனர்கள் சில பயனுள்ள தகவல்களை அளித்துள்ளனர். அவற்றை பார்க்கலாம்.

1. தேர்வு எழுதவிருப்பவர்கள் இனி புதிதாக படிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதை செய்தால் குழப்பம்தான் ஏற்படும். 

2. ஏற்கனவே படித்தவற்றை மட்டும் Revise செய்து பார்க்கவும். 

3. இன்னும் நன்றாக படித்திருக்கலாமோ என்ற கவலையோ பதட்டமோ அடையத் தேவையில்லை. இதுவரை படித்தவற்றை தேர்வில் சிறப்பாக வெளிப்படுத்தினாலே போதும். தேர்ச்சி பெற அதிக வாய்ப்புகள் உண்டு. 

4. இந்த 2 நாட்களில் language க்கு அதி முக்கியத்துவம் கொடுங்கள். குறைந்தது 95 கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்து விட்டீர்கள் என்றால் உங்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசம் அடையும். 

5. போட்டி அதிகரித்திருப்பதால் ஆப்டிடியூட் டெஸ்டில் கேட்கப்படும் 25 கேள்விகளுக்கும் சரியான விடையளித்தால் ரொம்ப நல்லது. 6-10 தமிழ்நாடு பாட புத்தகத்தில், TNPSC Aptitude பாடத்திட்டத்தை மட்டும் ரிவிஷன் செய்யவும். புதிதாக படிக்கத் தேவையில்லை. 

6. General Studies க்கு அதிக நேரம் கொடுக்க வேண்டாம். இனிமேல் அதற்கு நேரம் ஒதுக்கினால் வெற்றி வாய்ப்பு குறையும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

7. General studies பாடத்திற்கு, முந்தைய வினாத்தாள் வினா விடைகளை மட்டும் பாருங்கள். அவற்றை நீங்கள் படித்தவற்றுடன் தொடர்பு படுத்திப் பாருங்கள். இது போதுமானது. 

8. மிக முக்கியமாக இந்த 2 நாட்களும் டென்ஷனாக வேண்டாம். எவ்வளவுதான் படித்திருந்தாலும் பதட்டம் அடைந்தால், தெரிந்த கேள்விக்கும் பதில் அளிக்க முடியாது. வெற்றி உறுதி என்ற முழு நம்பிக்கையுடன் தேர்வுக்கு தயாராகுங்கள். 

.