நவம்பரில் TNPSC க்ரூப் 2 தேர்வுகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 9 கடைசி நாள்

Tnpsc.gov.in தளத்தில் இதுகுறித்த முழு அறிவிக்கையைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நவம்பரில் TNPSC க்ரூப் 2 தேர்வுகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 9 கடைசி நாள்

TNPSC குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் (க்ரூப் 2): தகவல், பாடத்திட்டம், விண்ணப்பப் படிவம், ஊதியம், தகுதி, பிற விவரங்கள்.


New Delhi: 

ஒருங்கிணைந்த குடியுரிமைப் பணிகளுக்கான (க்ரூப்-2) முதனிலைத் தேர்வு நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு துறைகளில் க்ருப் 2 பிரிவில் உள்ள 1199 காலியிடங்களை இத்தேர்வுகள் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  அறிவிக்கை வெளியிட்டுள்ளது.  முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இறுதி நாள் செப்டம்பர் 9 ஆகும். அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்குத் தொடர்புடைய பாடப்பிரிவில் இளங்கலை/முதுகலைப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழில் போதுமான பயிற்சி இருக்கவேண்டும்.

 

முதனிலைத் தேர்வுகள் அடுத்தகட்டத்துக்குத் தேர்வுபெற மட்டுமே ஆகும். அதில் எடுக்கும் மதிப்பெண்கள் இறுதித்தேர்வில் கணக்கில் கொள்ளப்படாது. முதனிலைத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2019 அறிவிக்கப்படும். இதையடுத்து தேர்வானவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முதன்மைத் தேர்வுகள் மே மாதத்தில் நடைபெறும்.

 

முழு விவரங்களைப் பதிவிறக்கிக் கொள்ள: http://www.tnpsc.gov.in/notifications/2018_15_group_ii_services.pdf

 

அண்மையில்தான் டிஎன்பிஸ்சி க்ரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

 

காலிப்பணியிடங்கள் விவரம்: 

·         Industrial Co-Operative Officer: 30 posts under Tamil Nadu Industries Subordinate Service

·         Probation Officer: 12 posts under Tamil Nadu Social Defence Subordinate Service

·         Junior Employment Officer (Non- Differently Abled): 16 posts under Tamil Nadu General Subordinate Service

·         Probation Officer: 18 posts under Tamil Nadu Jail Subordinate Service

·         Assistant Inspector of Labour: 26 posts under Tamil Nadu Labour Subordinate Service

·         Sub Registrar, Grade-II: 73 posts under Tamil Nadu Registration Subordinate Service

·         Special Assistant: 2 posts under Tamil Nadu Ministerial Service

·         Municipal Commissioner: 6 posts under Tamil Nadu Municipal Commissioner Subordinate Service

·         Assistant Section Officer: 16 posts under Tamil Nadu Secretariat Service\

·         Assistant Section Officer in Finance Department: 16 posts under Tamil Nadu Secretariat Service

·         Assistant Section Officer, Tamil Nadu Legislative Assembly Secretariat: 1 post

·         Assistant Section Officer: 4 posts under Tamil Nadu Secretariat Service

·         Assistant Section Officer Cum Programmer: 2 posts under Tamil Nadu Secretariat Service

·         Supervisor of Industrial Co-operatives in the Industries and Commerce Department: 39 posts under Tamil Nadu Industries Subordinate Service

·         Audit Inspector in the Audit Wing of Hindu Religious and Charitable Endowments Administration Department: 30 posts under Tamil Nadu Ministerial Service

·         Assistant Inspector in Local Fund Audit Department: 98 posts under Tamil Nadu Local Fund Audit Subordinate Service

·         Handloom Inspector in Handlooms and Textiles Department: 23 posts under Tamil Nadu Handlooms and Textiles Subordinate Service

·         Senior Inspectors in Milk Production and Dairy Development Department: 48 posts

·         Senior Inspector of Co-operative Societies in Department of Registrar of Co-operative Societies: 599 posts under Tamil Nadu Co-operative Subordinate Service

·         Supervisor / Junior Level-11 Superintendent in Tamil Nadu Agricultural Marketing / Agricultural Business Department: 118 posts under Tamil Nadu Agricultural Marketing Subordinate Service

·         Audit Assistant in Accounts Branch of Highways and Rural Works Department: 9 posts under Tamil Nadu General Subordinate Service

·         Executive Officer, Grade-II: 1 post under Tamil Nadu Town Panchayat Subordinate Service

·         Revenue Assistant in Revenue Department: 11 posts under Tamil Nadu Ministerial Service

 

மேலும் வேலைவாய்ப்புகள் குறித்த செய்திகளுக்கு: wwww.ndtv.com/jobs சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................