This Article is From Jul 06, 2018

டி.என்.இ.ஏ பட்டியல் வெளியிடப்பட்டது!

தமிழகத்தில் இருக்குப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஏதுவாக இருக்கும் டி.என்.இ.ஏ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டி.என்.இ.ஏ பட்டியல் வெளியிடப்பட்டது!

ஹைலைட்ஸ்

  • பொறியியல் படிப்புகளுக்கா இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது
  • பொறியியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டு ஆன்லைனில் கலந்தாய்வு நடக்கும்
  • அடுத்த மாதம் முதல் வாரத்தில் கலந்தாய்வு ஆரம்பிக்க உள்ளது
New Delhi:

தமிழகத்தில் இருக்குப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஏதுவாக இருக்கும் டி.என்.இ.ஏ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. tnea.ac.in. என்ற இணையதளத்தின் வாயிலாக இறுதிப் பட்டியலை தெரிந்து கொள்ள முடியும்

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் (மற்றும் கீழ் இயங்கும் கல்லூரிகள்), அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுய நிதியில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் சமர்பிக்கப்படும் சீட்கள் ஆகியவற்றுக்கு டி.என்.இ.ஏ அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டி.என்.இ.ஏ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

+2-வில் மாணவர்கள் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் படிப்புகளில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் வாரம் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. 5 சுற்றுகளில் இந்த ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் 5 நாட்களுக்கு நடைபெறும். முதல் மூன்று நாட்களுக்கு விருப்பத்திற்குறிய கல்லூரி மற்றும் படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கும், கடைசி இரண்டு நாட்கள் கல்லூரியை முடிவு செய்வதற்கும் ஒதுக்கப்படும். 

தமிழகத்தில் இந்த ஆண்டு, 91.1 சதவிகிதத்தினர் +2-வில் தேர்ச்சி பெற்றனர். டி.என்.இ.ஏ 2018 பட்டியலில் கீர்த்தனா ரவி என்ற பெண் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவர், ‘புது டெல்லியில் இருக்கும் ஜோசப் கல்லூரியில் இளங்களை வேதியல் படிக்க விண்ணப்பித்திருந்தேன். சில நாட்களுக்கு முன்னர், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டேன். தற்போது, நேர்காணல் முடிந்து கல்லூரியில் படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டேன். அங்கு தான் நான் படிக்கப் போகிறேன்’ என்றுள்ளார். 

.