This Article is From Dec 05, 2018

‘மழை பெய்யுங்க…’- வானிலை மையம் தகவல்

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்

‘மழை பெய்யுங்க…’- வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் எப்படிப்பட்ட வானிலை நிலவும் என்பது குறித்து, சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பாலச்சந்திரன், 'நேற்று குமரிக் கடல் முதல் தெற்கு ஆந்திர கடல் வரை நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு திசையில் நகர்ந்து, குமரிக் கடல் முதல் வடக்கு கேரள பகுதிவரை நிலவி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

மேலும் நாளை, தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். எனவே, மீனவர்கள் தென் மேற்கு வங்கக் கடல், குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு டிசம்பர் 5, 6 மற்றும் 7 தேதிகளில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், ஓரிரு இடங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யக் கூடும்' என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க : “ஒரே நேரத்தில் தமிழகம் முழுக்க கூட்டம் வருமா..?”- தினகரனுக்கு சவால்விடும் ஆவடிக்குமார்

 

 

.