“இன்றும் நாளையும் இந்த இடங்களில் மழை இருக்கு!”- வானிலை மையம்

"26, 27 மற்றும் 28 தேதிகளில் மாநிலத்தின் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது."

 Share
EMAIL
PRINT
COMMENTS
“இன்றும் நாளையும் இந்த இடங்களில் மழை இருக்கு!”- வானிலை மையம்

சுமார் 6 மாதங்களாக மழை பெய்யாமல் இருந்த மாநிலத்தின் தலை நகரமான சென்னையில் சென்ற வாரம் மழை பெய்து, வெப்பத்தைத் தணித்தது


தென் மேற்கு பருவமழையால், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சுமார் 6 மாதங்களாக மழை பெய்யாமல் இருந்த மாநிலத்தின் தலை நகரமான சென்னையில் சென்ற வாரம் மழை பெய்து, வெப்பத்தைத் தணித்தது. மழையைத் தொடர்ந்துதான் சென்னையில் 40 டிகிரிக்கு மேல் இருந்த வெயில் குறைந்தது. அடுத்து வரும் நாட்களிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும்.

இது குறித்து இந்திய வானிலை மையத்தின் சென்னை மண்டலம், “திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலையில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பொழியும்.

26, 27 மற்றும் 28 தேதிகளில் மாநிலத்தின் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரில் அதிகபட்சமாக 37 டிகிரி வெயில் நிலவும். குறைந்தபட்சமாக 28 டிகிரி வெயில் இருக்கும்” என்று தகவல் தெரிவித்துள்ளது. 


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................