தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுப் போட்டிகள் அறிவிப்பு!

மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி சென்னை எழும்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுப் போட்டிகள் அறிவிப்பு!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, பேச்சுப் போட்டி, நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி சென்னை எழும்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆகியவை வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் நடைப்பெற உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களுடன், முதல் பரிசாக 10,000 ரூபாயும், இரண்டாவது பரிசாக 7,000 ரூபாயும், மூன்றாவது பரிசாக 5,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது

போட்டிக்கான தலைப்புகள் போட்டி தொடங்கும் முன் அறிவிக்கப்படும் என்று மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள், கல்லூரி முதல்வர் அல்லது துறைத் தலைவரிடம் பரிந்துரையை பெற்று போட்டி நாளன்று துணை இயக்குநரிடம் அளிக்க வேண்டும். மேலும், போட்டி விதிமுறைகள், விண்ணப்பப் படிவங்கள் ஆகியவற்றை www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................