This Article is From Nov 11, 2019

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்!

1955ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.என்.சேஷன், 1990ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி உள்ளார்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்!

மாரடைப்பு காரணமாக டி.என்.சேஷன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். (File)

New Delhi:


திருநெல்லையை சேர்ந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.நாராயண சேஷன் (86) மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். 

1955ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.என்.சேஷன், 1990ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி உள்ளார். இந்தியாவின் 10வது தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்த அவர், அரசியல்வாதிகளை கட்டுக்குள் வைத்திருக்க தேர்தல் அமைப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

எனினும், அரசியல்வாதிகளுக்கு இவர் ஒரு பெரும் தடையாக இருப்பதைப் பார்த்து, அவரது ஆட்சிக் காலத்திலே அவரை கட்டுக்குள் வைக்க கூடுதலாக இரண்டு தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு நியமித்தது. 

தேர்தல் நடைமுறையை மிகவும் வெளிப்படையானதாக மாற்றுவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக ஆசியாவின் நோபல் என்று கருதப்படும் மதிப்புமிக்க ரமோன் மகசேசே விருதை பெற்றார். 

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் 1932ல் பிறந்த சேஷன், 1955ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளிலும், மத்திய அரசில் பல துறைகளிலும் பல்வேறு உயர் பதவிகளை வகித்து வந்தார். 

சேஷன் இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, பிரதமர் ராஜீவ் காந்தியால் அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டார். 

1977ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், கே.ஆர்.நாராயணனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்றார். 

ஷேசனின் மறைவுக்கு பல்வேறு முக்கிய நபர்களுடன், பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்வீட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேஷனை உண்மையான லெஜன்ட் என்று குறிப்பிட்டுள்ளார். 


 உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவின் தேர்தல் ஆணையத்தை சீர்திருத்துவதிலும், பலப்படுத்துவதிலும் டி.என்.சேஷன் பெரும் பங்கைக் கொண்டிருந்தார் என்று கூறியுள்ளார்.


சேஷன் இந்திய ஜனநாயகத்தின் தூண் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் தெரிவித்துள்ளார்.

"முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார் என்பது வருத்தமளிக்கிறது. அவர் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் எனது தந்தையின் வகுப்புத் தோழராக இருந்தார். தேர்தல் ஆணையத்தின் சுயாட்சியையும் அதிகாரத்தையும் அவருக்கு முன் எந்த தேர்தல் ஆணையரும் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தினார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

.