This Article is From Apr 18, 2020

ஊரடங்கை மீறி கூடுபவர்களை ட்ரோன் கொண்டு விரட்டியடிக்கும் தமிழக போலீஸ்! வைரல் வீடியோ!!

அதேபோல சேலம் நகர போலீஸ், இன்று ஒரு ட்ரோன் வீடியோவை தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரடங்கை மீறி கூடுபவர்களை ட்ரோன் கொண்டு விரட்டியடிக்கும் தமிழக போலீஸ்! வைரல் வீடியோ!!

Coronavirus in TN: திருப்பூர் மற்றும் சேலம் நகர காவல் துறை, ட்ரோன் கேமரா உதவி கொண்டு, மைதானங்களில் கூடுபவர்களை விரட்டியடித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது
  • அதே நேரத்தில் 103 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
  • தமிழகத்தில் 1,323 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழக அரசு, ஏப்ரல் 30 வரை 144 தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இப்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், பலர் ‘சமூக விலகலைக்' கடைப்பிடிக்காமல் பொது வெளியில் சுற்றி வருகின்றனர். அவர்களைக் கட்டுக்குள் வைக்க தமிழக நகர காவல் துறை புது யுக்தியைக் கையிலெடுத்துள்ளது.

திருப்பூர் மற்றும் சேலம் நகர காவல் துறை, ட்ரோன் கேமரா உதவி கொண்டு, மைதானங்களில் கூடுபவர்களை விரட்டியடித்துள்ளது. நேற்று திருப்பூர் நகரத்தில், ஊடரங்கு உத்தரவை மீறி கூடிய இளைஞர்கள் பலரை போலீஸ், விரட்டியடித்துள்ளது. 

இது குறித்து தமிழக காவல் துறை தன் ஃபேஸ்புக் பக்கத்தில், “ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது… நீங்கள் எங்கு சென்று கூடி விளையாடினாலும் (Drone Camera) ஆயிரம் கண்கள் கொண்டு உங்களைக் கண்காணிப்போம், ஊரடங்கு உத்தரவினை மீறினால் வழக்கு பதிவு செய்வோம். ஆகவே தங்களைத் தற்காத்துக் கொள்ள வீட்டிலிருங்கள்.. விலகியிருங்கள்..” என்று பதிவிட்டுக் கூடவே வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

அதேபோல சேலம் நகர போலீஸ், இன்று ஒரு ட்ரோன் வீடியோவை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 

.