‘தெய்வத்தின் முன் Sasikala குற்றமற்றவர்’- அதிமுகவில் கலகக்குரல்… புது ரூட்டில் தமிழக அமைச்சர்!

Support for Sasikala- சசிகலா மற்றும் தினகரன், அதிமுக-விலிருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘தெய்வத்தின் முன் Sasikala குற்றமற்றவர்’- அதிமுகவில் கலகக்குரல்… புது ரூட்டில் தமிழக அமைச்சர்!

Support for Sasikala- "அவர் சீக்கிரம் வெளியே வர வேண்டும் என்பது என் மனசாட்சியின் கருத்து."


ஜெயலலிதாவின் (jayalalitha) நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா (Sasikala), சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கிறார். அவர் விரைவில் பரோலில் வெளியே வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படும் நிலையில், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி (Rajendra Balaji), அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். 

சசிகலா, அதிமுக-விலிருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்பது குறித்து பேசிய ராஜேந்திர பாலாஜி, “சசிகலா மீண்டும் சேர்த்துக் கொள்வது குறித்து முடிவு செய்ய வேண்டியவர்கள் முதல்வரும் துணை முதல்வரும்தான். ஆனால், அவர் சீக்கிரம் வெளியே வர வேண்டும் என்பது என் மனசாட்சியின் கருத்து.

திமுக போட்ட பொய் வழக்கில்தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சூழ்ச்சியின் காரணமாக மட்டும்தான் இன்று அவர் சிரமப்பட்டு வருகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தெய்வத்தின் முன்னால் சசிகலா குற்றமற்றவர்தான். அவர் வேறு எந்தக் கட்சியிலும் சேர வாய்ப்பு கிடையாது. என்றும் அவர் அண்ணா திமுக-வுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்” என்று கூறியுள்ளார். 

biu3hkj

அதிமுக-வின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அந்தப் பொறுப்புக்கு வந்தவர் சசிகலா. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றதும் வெளியில் காட்சிகள் மாறின. முதலில் டிடிவி தினகரன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 

ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்திற்கு எதிராக ‘தர்ம யுத்தம்' நடத்தினார். பின்னர் தினகரனிடமிருந்து விலகிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்ஸுடன் கூட்டு சேர்ந்தார். அதிமுக-வின் ஒரு அணியாக செயல்பட்டு வந்த தினகரன் தரப்பு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தது.

தற்போது சசிகலா மற்றும் தினகரன், அதிமுக-விலிருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட அரசியல் சூழலில்தான் அதிமுக-வுக்கு உள்ளேயே சசிகலாவுக்கு ஆதரவுக் குரல் எழுந்துள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................