தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.6) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.6) கொரோனா நிலவரத்தை இங்குக் காணலாம்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய  (செப்.6) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 85,974 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,783 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,63,480 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,836 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 4,04,186 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 955 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,40,685ல் இருந்து 1,41,654 ஆக அதிகரித்துள்ளது. 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  11,264 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரையில் 52,98,508  பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக 50 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 5,820 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தம் 51,458 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

அரியலூர் - 37

செங்கல்பட்டு - 361

சென்னை -955

கோவை - 538

கடலூர் - 388

தர்மபுரி - 24

திண்டுக்கல் - 118

ஈரோடு -118

கள்ளக்குறிச்சி - 184

காஞ்சிபுரம் - 196

கன்னியாகுமரி - 116

கரூர் - 43

கிருஷ்ணகிரி - 86

மதுரை - 111

நாகை - 136

நாமக்கல் - 96

நீலகிரி - 48

பெரம்பலூர் -17

புதுக்கோட்டை - 100

ராமநாதபுரம் - 42

ராணிப்பேட்டை - 135

சேலம் - 122

சிவகங்கை - 33

தென்காசி - 53

தஞ்சை - 150

தேனி - 84

திருப்பத்தூர் - 44

திருவள்ளூர் -246

திருவண்ணாமலை - 272

திருவாரூர் - 123

தூத்துக்குடி - 50

திருநெல்வேலி - 132

திருப்பூர் - 153

 திருச்சி - 111

வேலூர் - 158

விழுப்புரம் - 130

விருதுநகர் - 67