This Article is From Aug 10, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று மட்டும் 6,037 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,44,675 ஆக அதிகரித்துள்ளது. இன்று 114 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

ஹைலைட்ஸ்

  • ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,44,675 ஆக அதிகரித்துள்ளது
  • இன்று 114 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
  • ஒட்டு மொத்த உயிரிழப்பு 5,041 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 3.02 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 67,153 மாதிரிகளில் 5,914 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 12வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,02,815 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,037 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,44,675 ஆக அதிகரித்துள்ளது. இன்று 114 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த 6 தினத்தைத் தொடர்ந்து இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஒட்டு மொத்த உயிரிழப்பு 5,041 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,099 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,914 பேரில் 976 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,10,121 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,327 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 54

செங்கல்பட்டு - 483

சென்னை -976

கோவை - 292

கடலூர் - 287

தர்மபுரி - 18

திண்டுக்கல் - 173

ஈரோடு -37

கள்ளக்குறிச்சி - 85

காஞ்சிபுரம் - 310

கன்னியாகுமரி - 205

கரூர் - 44

கிருஷ்ணகிரி - 58

மதுரை - 100

நாகை - 57

நாமக்கல் - 29

நீலகிரி - 7

பெரம்பலூர் - 35

புதுக்கோட்டை - 133

ராமநாதபுரம் - 35

ராணிப்பேட்டை - 184

சேலம் - 128

சிவகங்கை - 59

தென்காசி - 114

தஞ்சை - 123

தேனி - 357

திருப்பத்தூர் - 84

திருவள்ளூர் - 399

திருவண்ணாமலை - 154

திருவாரூர் - 30

தூத்துக்குடி - 196

திருநெல்வேலி - 83

திருப்பூர் - 48

 திருச்சி - 56

வேலூர் - 189

விழுப்புரம் - 89

விருதுநகர் - 189

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 1,345

செங்கல்பட்டு - 18,332

சென்னை - 1,10,121

கோவை - 6,961

கடலூர் - 5,061

தர்மபுரி - 898

திண்டுக்கல் - 4,051

ஈரோடு - 1,101

கள்ளக்குறிச்சி - 4,564

காஞ்சிபுரம் - 12,131

கன்னியாகுமரி - 6,553

கரூர் - 816

கிருஷ்ணகிரி - 1,480

மதுரை - 12,104

நாகை - 1,204

நாமக்கல் - 1,020

நீலகிரி - 965

பெரம்பலூர் - 753

புதுக்கோட்டை - 3,324

ராமநாதபுரம் - 3,682

ராணிப்பேட்டை - 7,151

சேலம் - 4,744

சிவகங்கை - 2,9996

தென்காசி - 3,246

தஞ்சை - 4,215

தேனி - 8,257

திருப்பத்தூர் - 1,689

திருவள்ளூர் - 17,340

திருவண்ணாமலை - 7,988

திருவாரூர் - 2,026

தூத்துக்குடி - 9,357

திருநெல்வேலி - 6,662

திருப்பூர் - 1,197

 திருச்சி - 5,170

வேலூர் - 7,546

விழுப்புரம் - 4,620

விருதுநகர் - 10,155

.