தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 06 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று மட்டும் 6,272 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,21,087 ஆக அதிகரித்துள்ளது. இன்று 110 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 06 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

ஹைலைட்ஸ்

  • இன்று 110 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
  • ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,571 ஆக அதிகரித்துள்ளது
  • இதுவரை சென்னையில் மட்டும் 2,248 பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2.79 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 67,153 மாதிரிகளில் 5,684 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 8வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 2,79,144 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,272 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,21,087 ஆக அதிகரித்துள்ளது. இன்று 110 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று தினத்தைத் தொடர்ந்து இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,571 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 54,184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் 34வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,684 பேரில் 1,091 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,06,096 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,248 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 24

செங்கல்பட்டு - 408

சென்னை -1,091

கோவை - 190

கடலூர் - 214

தர்மபுரி - 7

திண்டுக்கல் - 127

ஈரோடு -62

கள்ளக்குறிச்சி - 75

காஞ்சிபுரம் - 336

கன்னியாகுமரி - 222

கரூர் - 26

கிருஷ்ணகிரி - 55

மதுரை - 101

நாகை - 9

நாமக்கல் - 30

நீலகிரி - 22

பெரம்பலூர் - 4

புதுக்கோட்டை - 87

ராமநாதபுரம் - 20

ராணிப்பேட்டை - 270

சேலம் - 161

சிவகங்கை - 28

தென்காசி - 64

தஞ்சை - 162

தேனி - 297

திருப்பத்தூர் - 80

திருவள்ளூர் - 320

திருவண்ணாமலை - 153

திருவாரூர் - 23

தூத்துக்குடி - 129

திருநெல்வேலி - 250

திருப்பூர் - 34

 திருச்சி - 97

வேலூர் - 192

விழுப்புரம் - 76

விருதுநகர் - 100

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 1,154

செங்கல்பட்டு - 16,897

சென்னை - 1,06,096

கோவை - 5,997

கடலூர் - 4,232

தர்மபுரி - 815

திண்டுக்கல் - 3,331

ஈரோடு - 888

கள்ளக்குறிச்சி - 4,131

காஞ்சிபுரம் - 10,993

கன்னியாகுமரி - 5,829

கரூர் - 680

கிருஷ்ணகிரி - 1,263

மதுரை - 11,689

நாகை - 921

நாமக்கல் - 890

நீலகிரி - 919

பெரம்பலூர் - 572

புதுக்கோட்டை - 2,755

ராமநாதபுரம் - 3,503

ராணிப்பேட்டை - 6,342

சேலம் - 4,251

சிவகங்கை - 2,768

தென்காசி - 2,629

தஞ்சை - 3,484

தேனி - 6,836

திருப்பத்தூர் - 1,436

திருவள்ளூர் - 15,890

திருவண்ணாமலை - 7,058

திருவாரூர் - 1,874

தூத்துக்குடி - 8,450

திருநெல்வேலி - 6,071

திருப்பூர் - 1,059

 திருச்சி - 4,834

வேலூர் - 6,897

விழுப்புரம் - 4,316

விருதுநகர் - 9,441