This Article is From Oct 21, 2019

Doctor பட்டம் பெற்ற முதல்வர் Edappadi Palanisamy சொன்ன ‘ஊசி - நூல்’ கதை!

Doctor Edappadi Palanisamy - முதல்வர் பழனிசாமிக்கு, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம், டாக்டர் பட்டத்தை வழங்கினார்

Doctor பட்டம் பெற்ற முதல்வர் Edappadi Palanisamy சொன்ன ‘ஊசி - நூல்’ கதை!

Doctor Edappadi Palanisamy - இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Doctor Edappadi Palanisamy - சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு (Edappadi Palanisamy) இன்று கவுரவ டாக்டர் பட்டம் (Honarary Doctor) கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாக்டர் பட்டம் வாங்கிய பிறகு உரையாற்றி முதல்வர், மாணவர்களுக்கான கல்வி எவ்வளவு முக்கியம் என்பது பற்றி உரையாற்றினார். 

“வாழ்க்கையைக் கற்க, மனிதனின் அறிவு மேம்பட ஏட்டுக் கல்வி மட்டும் போதாது. இலக்கியம், நீதிக் கதைகள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வது மிக முக்கியமானது. அப்போதுதான் கல்வியானது முழுமை பெறுகிறது.

மாணவர்கள் கற்ற கல்வி ஊசியின் கூர்மை போன்றது. வாழ்க்கைக் கல்வி, பொது அறிவு ஆகியவை ஊசியின் காது போன்றது. தன்னுள் நூலை நுழைத்துக் கொள்ள காது இருப்பதால்தான் கூர்மையுள்ள ஊசி பயன்படுகிறது. அதேபோன்று மாணவர்களாகிய நீங்கள் எவ்வளவுதான் படித்திருந்தாலும், உங்கள் கல்வி முழுமை பெற நீங்கள் ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கைக் கல்வியையும் சேர்த்துக் கற்பது அவசியமாகும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை ஷோபனா உள்ளிட்டோருக்கும் இன்றைய நிகழ்ச்சியில் கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. 

முதல்வர் பழனிசாமிக்கு, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம், டாக்டர் பட்டத்தை வழங்கினார். புதிய நீதிக் கட்சியின் தலைவரான அவர், அதிமுக கூட்டணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலின்போது, அதிமுக சார்பில் சண்முகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

.