“குறைந்த தொகுதியில் போட்டியிட்டதால்தான்…”- பத்திரிகையாளர் கேள்விக்கு உஷ்ணமான எடப்பாடி!

"இந்த முறை நாங்கள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம்."

 Share
EMAIL
PRINT
COMMENTS
“குறைந்த தொகுதியில் போட்டியிட்டதால்தான்…”- பத்திரிகையாளர் கேள்விக்கு உஷ்ணமான எடப்பாடி!

"திமுக பல பொய் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு தேர்தலில் வெற்றியடைந்துள்ளது."


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

அப்போது ஒரு நிருபர், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வாக்கு சதவிகிதம் பாதிக்கும் மேல் குறைந்துவிட்டதே…“ என்று கேள்வியை முடிப்பதற்குள் முதல்வர் பழனிசாமி, “என்ன கணக்கில் இதைக் கேட்கிறீர்கள். அம்மா தலைமையிலான அதிமுக, சென்ற முறை தமிழகத்தில் இருக்கும் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. அப்போது எங்கள் வாக்கு சதவிகிதம் 40-க்கு கிட்டே இருந்தது. 

இந்த முறை நாங்கள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். நாங்கள் பாதி தொகுதிகளில்தான் போட்டியிட்டோம். ஆகவேதான் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. திமுக பல பொய் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு தேர்தலில் வெற்றியடைந்துள்ளது. அது ஒரு வெற்றியே கிடையாது” என்று உஷ்ணமாக பதில் அளித்தார். 

தொடர்ந்து அவரிடம், “புதிய கல்விக் கொள்கை மற்றும் ட்வீட் நீக்கம் சர்ச்சை” குறித்து கேட்டபோது, “கல்விக் கொள்கையைப் பொறுத்தவரையில் அதிமுக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நாங்கள் முன்னரே தெளிவாக தெரிவித்துவிட்டோம். எப்போதும் இரு மொழிக் கொள்கையைத்தான் நாங்கள் பின்பற்றுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த மொழியையும் திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

மேலும் அவர், “தமிழை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்விட்டர் மூலம் நான் கோரிக்கை வைத்தேன். ஆனால், அது அரசியல் ஆக்கப்பட்டுவிட்டது. ஆகவேதான் அதை நீக்கினேன்” என்று விளக்கினார். 


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................