“தமிழுக்கு இதைச் செய்யுங்கள்..!”- பிரதமர் மோடிக்கு ரிக்வஸ்ட் வைத்த எடப்பாடி பழனிசாமி

புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக் குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
“தமிழுக்கு இதைச் செய்யுங்கள்..!”- பிரதமர் மோடிக்கு ரிக்வஸ்ட் வைத்த எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு ஸ்பெஷல் ரிக்வஸ்ட் வைத்துள்ளார். 


புதிய கல்விக் கொள்கை தொடர்ந்து விவாதப் பொருளாக மாறி வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு ஸ்பெஷல் ரிக்வஸ்ட் வைத்துள்ளார். 

புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக் குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. இந்த குழுவானது, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது. அந்த, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த வரைவு பொது மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் இந்த வரைவு அறிக்கை குறித்த கருத்தை மத்திய அரசிடம் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. 

இதைத் தொடர்ந்து மத்திய அரசு, “எந்த மொழியும் எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது. இது வெறும் வரைவு மட்டும்தான். இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை” என்று விளக்கம் அளித்தது. தொடர்ந்து திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, “மதிப்பிற்க்குரிய பிரதமர் மோடிஜி அவர்களுக்கு ஒரு கோரிக்கை. தமிழ்நாடு அல்லாத மற்ற மாநிலங்களில் தமிழை தேர்ந்தெடுத்துப் படிக்கும் வகையில் விருப்பப் பாடமாக வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் உலகின் மிகவும் தொன்மையான மொழிக்கு மிகப் பெரிய சேவை செய்தது போன்று இருக்கும்” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................