This Article is From Mar 23, 2019

‘பிரியாணி, புரோட்டா கடை என எதையும் விடமாட்டார்கள்!’- திமுக-வை வறுத்தெடுத்த எடப்பாடியார்

அம்மா ஆட்சியில் சட்டத்துக்கு முன்னர் அனைவரும் சமம்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

‘பிரியாணி, புரோட்டா கடை என எதையும் விடமாட்டார்கள்!’- திமுக-வை வறுத்தெடுத்த எடப்பாடியார்

அராஜகத்தில் ஈடுபடுபவர்களை அம்மாவின் அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும்: எடப்பாடி

கடந்த சில நாட்களாக தொடர் பிரசாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று வேலூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். அப்படி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ‘திமுக-காரர்கள் பிரியாணி கடை, புரோட்டா கடை என்று எங்கு சென்றாலும் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுப்பதில்லை. அவ்வளவு அராஜகம் செய்கிறார்கள்' என்று கூறி விமர்சித்துள்ளார். 

அவர் மேலும் பேசுகையில், ‘பிரியாணி, புரோட்டா கடை இல்லை. அழகு நிலையம் சென்றால், பொருட்களைத் தூக்கி போட்டு உடைப்பது என்று அட்டூழியம் செய்கிறார்கள் திமுக-காரர்கள். எதிர்கட்சியாக இருக்கும்போதே திமுக, இப்படி அராஜகம் செய்கிறது என்றால், ஆளுங்கட்சியாக வந்தால் நம்மால் வழ முடியுமா. சிந்திக்க வேண்டும். 

ஆனால், அம்மா ஆட்சியில் சட்டத்துக்கு முன்னர் அனைவரும் சமம். அராஜகத்தில் ஈடுபடுபவர்களை அம்மாவின் அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும்' என்று பேசினார். 

முன்னதாக தர்மபுரி பிரசாரத்தில் ஸ்டாலின், டாக்டர் அன்புமணி, எப்போதும் கவர்ச்சியாகவும் கம்பீரமாகவும் இருப்பார். ஆனால், இப்போது அவர் முகத்தைப் பாருங்கள். கம்பீரமும் இல்லை, கவர்ச்சியும் இல்லை, அந்த வேகமும் இல்லை, அந்தத் துடிப்பும் இல்லை. ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என்று எல்லா இடத்திலேயும் போஸ்டர் அடித்து ஒட்டினார். ஆனால், இன்றைக்கு அவருடைய நிலை என்ன..?

டயர நக்குனுவங்க என்று சொன்னது யார். எடப்பாடியையும் ஒபிஎஸ்-யும் அன்புமணி டயர் நக்கி என்று சொன்னார். டயர் நக்கி அருகில் நின்று ஓட்டுக் கேட்டுக் கொண்டு வருகிறீர்களே, வெட்கமாக இல்லையா?' என்று பேசினார். 

.