விஜயகாந்துடன் முதல்வர் எடப்பாடி திடீர் சந்திப்பு!

தேமுக பொதுச்செயலாளர் விஜயகாந்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை நேரில் சந்தித்து பேசினார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
விஜயகாந்துடன் முதல்வர் எடப்பாடி திடீர் சந்திப்பு!

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்குவது குறித்த பேச்சுவார்த்தை, அனைத்து கட்சிகளுடனும் சுமூகமாக முடிவுற்ற நிலையில், எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது, விஜயகாந்த் இல்லம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜயகாந்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................