This Article is From Oct 18, 2018

சபரிமலை விவகாரம்: ‘அவசரச் சட்டம் வேண்டும்!’- தமிழிசை கோரிக்கை

சபரிமலை விவகாரத்தில் தீர்வு காண, கேரள அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

சபரிமலை விவகாரம்: ‘அவசரச் சட்டம் வேண்டும்!’- தமிழிசை கோரிக்கை

நேற்று கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. இந்நிலையில் இள வயது பெண்கள் நுழைவதை போராட்டக்காரர்கள் தடுத்த நிலையில், கேரள அரசு, 5 பேருக்கு மேல் கூடுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. சன்னிதானம், பாம்பா, நிலக்கல், இலவாங்கல் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களிலிருந்து தான் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை பாதுகாப்பு கமிட்டி என்று சொல்லப்படும் அமைப்பு, இன்று மாநிலம் தழுவிய பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் வழியில் இருக்கும் கடைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த பந்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சபரிமலை விவகாரம் குறித்து தமிழிசை, ‘சபரிமலையில் பெண்கள் நுழையாமல் இருக்கும் வகையில் கேரள அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும். மக்களின் நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்ட சாசனம் உரிமை வழங்கியுள்ளது. அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசு தான். அவர்கள் இது குறித்து அவசரச் சட்டம் இயற்றி பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யமால் இருக்கும் கேரள அரசு, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது' என்று பேசியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.