This Article is From Jul 17, 2019

நீட் தேர்வு குறித்த மசோதாக்கள் 2017 -ஆம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டன : மத்திய அரசு தகவல்

தமிழக மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நிராகரித்தும் குடியரசு தலைவர் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18 தேதி உத்தரவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வு குறித்த மசோதாக்கள் 2017 -ஆம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டன : மத்திய அரசு தகவல்

தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மசோதா நிறைவேற்றி அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தனர்.

Chennai:

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு இயற்றிய 2 சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு கடந்த 2017-ஆம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பி விட்டதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல் தெரிவித்துள்ளது. 

உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் நீதிபதிகள் எஸ். மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் முன் பிராமண பத்திரத்தை தாக்கல் செய்தனர். 

மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நடைபெறும் நீட் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மசோதா நிறைவேற்றி அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்கண்ட மசோதாக்களுக்கான குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு செப்டம்பர் 18 கொண்டு செல்லப்பட்டு அவை செப்டம்பர் 22 தேதியில் மாநில அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 15, 2017 ஆம் ஆண்டு சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசு இரண்டு மசோதாக்களையும் நிராகரித்து விட்டதாக தெரிவித்தது. இந்த இரண்டு மசோதாக்களையும் பெற்றுக் கொண்ட தேதி மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 
தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. தமிழக மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நிராகரித்தும் குடியரசு தலைவர் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18 
தேதி உத்தரவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு இயற்றிய 2 சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு கடந்த 2017-ஆம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பி விட்டதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல் தெரிவித்துள்ளது. 

உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் நீதிபதிகள் எஸ். மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் முன் பிராமண பத்திரத்தை தாக்கல் செய்தனர். 

மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நடைபெறும் நீட் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மசோதா நிறைவேற்றி அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்கண்ட மசோதாக்களுக்கான குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு செப்டம்பர் 18 கொண்டு செல்லப்பட்டு அவை செப்டம்பர் 22 தேதியில் மாநில அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 15, 2017 ஆம் ஆண்டு சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசு இரண்டு மசோதாக்களையும் நிராகரித்து விட்டதாக தெரிவித்தது. இந்த இரண்டு மசோதாக்களையும் பெற்றுக் கொண்ட தேதி மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 

தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. தமிழக மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நிராகரித்தும் குடியரசு தலைவர் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18 தேதி உத்தரவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.