This Article is From Nov 29, 2018

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் தேர்தலில் பாஜக வெற்றி பெறாது - மம்தா கணிப்பு

2019 மேற்குவங்காள தேர்தலில் பாஜக எந்த இடத்திலும் வெற்றி பெறாது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் தேர்தலில் பாஜக வெற்றி பெறாது  - மம்தா கணிப்பு

ம.பி. மற்றும் ராஜஸ்தான் தேர்தலில் பாஜக வெற்றி பெறாது என்கிறார் மம்தா.

Purulia:

மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளிலும், 2019 -ல் நடைபெறவுள்ள அசாம், ஜார்க்கண்ட், ஒடிசா மாநில தேர்தல்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பலராம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மம்தா பானர்ஜி பேசியதாவது-

மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் எல்லையில் உள்ள புருளியா, மேற்கு மித்னாபூர், ஜர்க்ராம், பிர்பம் ஆகிய மாவட்டங்களில் இருப்பவர்கள் தயாராகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் 2019 ஜார்க்கண்ட் சட்டபை தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போகிறோம்.

ஒடிசா தேர்தலிலும் நாங்கள் போட்டியிட தயாராகி வருகிறோம். மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவோம். அசாம் மக்களையும் வங்காள மக்களையும் பிரிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெறாது. மத்தியிலும் அக்கட்சி ஆட்சியை இழக்கும்.

அடுத்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் ஆட்சியை பிடிப்போம் என்ற நினைப்பை பாஜக மறந்து விட வேண்டும். ஜார்க்கண்ட்டில் தேர்தல் நடந்தால் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
 

.