This Article is From Oct 23, 2019

Heavy Rain Alert: திருவள்ளூர், காஞ்சி, கோவை மக்களே… உங்கள் ஊரில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Heavy Rain Alert: "திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யக்கூடும்"

Heavy Rain Alert: திருவள்ளூர், காஞ்சி, கோவை மக்களே… உங்கள் ஊரில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Heavy Rain Alert: தமிழகம் மற்றும் புதுவையில் பொரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்

Heavy Rain Alert: வடகிழக்கு பருவமழை (NEM) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழை (Heavy Rain) பெய்யக்கூடும் என்பது குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள தகவல்படி, ‘மேற்கு மத்திய வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் பொரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும்,

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யக்கூடும். 

சென்னை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.