நாடு முழுவதும் 267 ரயில்களின் நேரத்தை மாற்றிய ரயில்வே நிர்வாகம்!!

மாற்றி அமைக்கப்பட்ட புதிய நேரம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நாடு முழுவதும் 267 ரயில்களின் நேரத்தை மாற்றிய ரயில்வே நிர்வாகம்!!

148 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


New Delhi: 

நாடு முழுவதும் 267 ரயில்களின் நேரத்தை வடக்கு ரயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது. மாற்றப்பட்ட புதிய நேரம் இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. 

புதுடெல்லி - சண்டிகர் - புதுடைல்லி மற்றும் புதுடெல்லி - லக்னோ - புதுடெல்லி ஆகிய வழித் தடங்களில் 2 தேஜஸ் ரயில்கள் புதிதாக இயக்கப்படுகின்றன. 

இதேபோன்று டேராடூன் - டெல்லி நந்தா தேவி எக்ஸ்ப்ரஸ் ரயிலை ராஜஸ்தானின் கோட்டா வரைக்கும், அலிகார் - மொராதாபாத் பயணிகள ரயிலை கஜ்ராலா வரைக்கும் வடக்கு ரயில்வே நிர்வாகம் நீட்டித்துள்ளது. 

மொத்தம் 148 ரயில்களின் புறப்பாடு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 93 ரயில்களை வழக்கத்தை விட முன் கூட்டியும், 55 ரயில்கள் வழக்கத்தை விட சற்று காலம் தள்ளியும் இயக்கப்படுகின்றன. 

இதேபோன்று 118 ரயில்களின் வருகை நேரம் மாற்றப்பட்டுள்ளது. இவற்றில் 57 ரயில்கள் முன்கூட்டியும், 61 ரயில்கள் காலம் தள்ளியும் வழக்கத்திற்கு மாற்றமாக வந்தடைகின்றன. 
 



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................