வரைமுறையற்ற டிக்டோக் வீடியோக்கள்: கவலைப்படும் பெற்றோர்கள்!

பாலியல் ரீதியான வசனங்கள், பாடல் வரிகள், காட்சிகள் போன்ற தவறான வழிநடத்தலுக்கு இழுத்து செல்வதாக கூறப்படுகிறது.

வரைமுறையற்ற டிக்டோக் வீடியோக்கள்: கவலைப்படும் பெற்றோர்கள்!

500 மில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்ட டிக்டோக், கடந்த ஆண்டில் மியூஸிக்லீ ஆப்பை விலைக்கு வாங்கி அமெரிக்காவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தியது சீனா.

Paris:

15 நொடிகள் ஓடக்கூடிய வீடியோக்களை உருவாக்கும் டிக்டோக், வலைதளத்தில் லட்சக்கணக்கான டீன் ஏஜ் இளைஞர்கள் வலைபதிவிட்டு வருகின்றனர். ஆனால், இவர்கள் அனைவரும் பெற்றோர்களின் கவனமில்லாமல் இதனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"இந்த வருடத்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப் இதுதான்" என்று  ஆய்வு நிறுவனமான சென்சார் டவர் கூறியுள்ளது. இது ஃபேஸ்புக் , ட்விட்டர், இன்ஸ்டா ஆப்களை விடவும் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது.

500 மில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்ட டிக்டோக், கடந்த ஆண்டில் மியூஸிக்லீ ஆப்பை விலைக்கு வாங்கி அமெரிக்காவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தியது.

"வைரல் விஷயங்களும், பகிரும் அமைப்புள்ள விஷயங்களும் அதிக டவுன்லோடுகளை பெறும்" என்று சிலிக்கான் வேலி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த ஆப்பில் நிறைய எடிட் செய்யப்படாத வரையறையற்ற வீடியோக்கள் அதிகம் இடம் பெற முடியும் என்பதால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்களால் கூறப்படுகிறது. வரையறை அல்லாமல் 13 வயது குழந்தை கூட இதில் உள்ள வீடியோக்களை பார்க்க முடிகிறது. பாலியல் ரீதியான வசனங்கள், பாடல் வரிகள், காட்சிகள் போன்ற தவறான வழிநடத்தலுக்கு இழுத்து செல்வதாக கூறப்படுகிறது.

அதேபோல தவறான கருத்துக்கள் பதியப்படுவதும், தனிமனித சுதந்திரம் பறிபோவதும் குற்றம் சாட்டப்படுகிறது. 1,70,000 பேர் இந்த ஆப்பிற்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இதில் 11-14 வயதுக்குட்பட்டோர் 30 சதவிகித்துக்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

"பெற்றோர்கள் இணையதள ட்ரெண்டை புரிந்துகொள்வதில்லை" என்ற வாதமும் இதற்கு எதிராக முன் வைக்கப்படுகிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com