மஹாராஷ்ட்ராவில் 13பேரை அடித்துக் கொன்ற பெண் புலி சுட்டு கொல்லபட்டது.  

கடந்த செப்டம்பர் மாதம், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, அவினி (டி1) என்னும் பெண் புலியை கண்ட உடன் சுட உத்தரவு பிறபிக்கப்பட்டது.

மஹாராஷ்ட்ராவில் 13பேரை அடித்துக் கொன்ற பெண் புலி  சுட்டு கொல்லபட்டது.  

மரபு சோதனை செய்யபட்டபோது அங்கு நடந்த 13 கொலைகளில் 5 கொலைகளுடன் அவினியின் மரபணு ஒத்துப்போனது.

New Delhi:

புது டெல்லி: கடந்த செப்டம்பர் மாதம், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, அவினி (டி1) என்னும் பெண் புலியை கண்ட உடன் சுட உத்தரவு பிறபிக்கப்பட்டது. மக்கள் பலர் அளித்த ஆன்லைன் பெட்டிஷன்களின் (petitions) விளைவாக உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

இதையடுத்து, வனத்துறையினரால் மஹாராஷ்ட்ராவில் உள்ள யாவாட்மாவில் (yavatmal) அவினி சுட்டுக்கொல்லபட்டது. நிலையில்  அவினிக்கு,  பத்து மாதமே ஆகி உள்ள இரண்டு குட்டிகள் உள்ளன.

சுமார் மூன்று மாதங்களாக 150 பேர் கொண்ட குழு, சமீபத்திய தொழிநுட்பங்கள் மற்றும் யானைகளைக்கொண்டு அவினியை தேடிவந்தனர். வனத்துறை நடத்திய இந்த தேடுதல் வேட்டையில்,மோப்பநாய்கள், பொறி கேமராக்கள், டொரோன்கள்( drones), என அனைத்து தொழிநுட்பங்களும் கொண்டு திப்பெஸ்வர்  புலிகள் சரணாலயத்தில் தேடுதல் வேட்டை நடந்தது.

இத்துடன் தனியார் நிறுவன துப்பாக்கி சுடுபவரான ஷாவாட் அலி கான் என்பவரையும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தினர்.
அவினி, 2012-ல்  யாவாட்மா  காடுகளில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அவினியின் மரபு சோதனை செய்யபட்டபோது அங்கு நடந்த 13 கொலைகளில் 5 கொலைகளுடன் அவினியின் மரபணு ஒத்துப்போனது.
சில ஆண்டுகளுக்கு முன் வனத்துறையினர் நடத்திய கணக்கெடுப்பில் அவினியை தவிர அங்கு ஒரு ஆண்புலி மட்டுமே உள்ளதாக தகவல் அளித்தனர். மேலும் அந்த ஆண்புலியின் மரபணுவை சோதித்தபோது அது ஒரு கொலையுடன் மட்டுமே ஒத்துப்போனது என வனத்துறையினர் தகவளித்துள்ளனர்.
கடந்த மாதம், பாம்பாய் ஹக்கோர்டின் நாக்பூர் அமர்வு பெண் புலியை கண்டவுடன் சுட உத்திரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து வனவிலங்கு ஆர்வலர் ஜெரில்.அ, அவினியை கொல்வதால் அதன் குட்டிகள் அனாதையாகிவிடும் என்பதால் அதை உயிருடன் பிடிக்க வேண்டும் என முறையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(With inputs from PTI)