''ட்ரம்ப்புடன் ஒரு சிறப்பான, தரமான சம்பவம்'' பெருமிதம் கொள்ளும் டைகர் உட்ஸ்!

ட்ரம்ப்போடு உட்ஸ் ஆடும் போது, அவருடன் 18 முறை பட்டம் வென்ற சாம்பியன் கோல்ஃப் வீரர் நிக்லஸ் உடனிருந்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
''ட்ரம்ப்புடன் ஒரு சிறப்பான, தரமான சம்பவம்'' பெருமிதம் கொள்ளும் டைகர் உட்ஸ்!

கோல்ஃப் லெஜெண்ட் நிக்லஸ் ட்ரம்ப்புடன் உள்ள படம் வெளியாகியுள்ளது.


Los Angeles, United States: 

ஹைலைட்ஸ்

  1. "ட்ரம்ப் மற்றும் ஜாக் நிக்லஸ் இருவருடன் கோல்ஃப் ஆடியது மகிழ்ச்சி"
  2. "அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் மிகவும் பிஸியாக இருக்கிறார்" டைகர் உட்ஸ்
  3. "இரண்டு அதிபர்களுடன் விளையாடியதில் மகழ்ச்சி" டைகர் உட்ஸ்

கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கோல்ஃப் லெஜெண்ட் ஜாக் நிக்லஸ் ஆகியோருடன் கோல்ஃப் ஆடியது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். 

மேலும், "எனக்கு இதுவரை இரண்டு அதிபர்களுடன் கோல்ஃப் ஆட வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சிய்டைகிறேன். அந்த இரண்டு நாட்களையும் என்னால் மறக்கவே முடியாது" என்றார். ஒபாமா ஆட்சிக்காலத்தில் பார்மர்ஸ் இன்ஷூரன்ஸ் ஓப்பனுக்கு முன்பாக கோல்ஃப் ஆடினார். 

இந்த முறை ட்ரம்ப்போடு உட்ஸ் ஆடும் போது, அவருடன் 18 முறை பட்டம் வென்ற சாம்பியன் கோல்ஃப் வீரர் நிக்லஸ் உடனிருந்தார். கடந்த மாதம் ஜூபிடன், ப்ளோரிடாவில் கோல்ஃப் ஆடியுள்ளனர். இப்போது கோல்ஃப் லெஜெண்ட் நிக்லஸ் ட்ரம்ப்புடன் உள்ள படம் வெளியாகியுள்ளது.

உட்ஸ், அமெரிக்க பிஜிஏ டூருக்கு முன்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, அதிபரின் ஆட்டத்தை பற்றி பெரிதாக கருத்து தெரிவிக்கவில்லை. மேலும் "அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அவர் அதிகமாக தற்போது கோல்ஃப் ஆடுவதில்லை. அவருக்கு நிறைய பணிகள் உள்ளது" என்றார். 

"நாங்கள் ஒரு சிறப்பான ஆட்டத்தை ஆடினோம். ஜாக் நிக்லஸுடன் ஆடி நெடுநாட்கள் ஆகிவிட்டது" என்றார் உட்ஸ்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................