இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு! விவரம் உள்ளே!!

2018 வரையிலான புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். உலகில் புலிகள் பாதுகாப்புக்கு சிறந்த இடமாக இந்தியா கருதப்படுகிறது

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு! விவரம் உள்ளே!!

கடந்த 2006-ல் 1400 - ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2008-ல் 2977- ஆக உயர்ந்துள்ளது.

Bhopal:

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை 526- ஆக உள்ளது. 

புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். புலிகளைப் பொருத்தவரையில் அவற்றின் பாதுகாப்புக்கு சிறந்த இடமாக இந்தியா கருதப்படுகிறது. 

முன்னதாக 2006-ல் கணக்கெடுக்கப்பட்டபோது நாட்டில் சுமார் 1400 புலிகள் இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 2977 - ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலங்கள் வாரியாக பார்க்கும்போது இந்தியாவிலேயே அதிக புலிகளைக் கொண்டதாக மத்திய பிரதேசம் இருக்கிறது. இங்கு 526 புலிகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளன. 

இதற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் 524 புலிகள் உள்ளதாகவும், உத்தரகாண்டில் 442 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கையை உயர்த்தியதற்காக மாநில வனத்துறை, உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்டவற்றுக்கு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

More News