ஒரே வீடியோ… Rajini, சோ இருவரும் க்ளோஸ்… பங்கமாக கலாய்த்த DMK எம்பி!!

Thuglak Row: “ரஜினி Sir., நீங்க ஒன்னு சொல்லுறீங்க. ஆனா டீ கடை Owner சோ வேறு ஒன்னு சொல்லுராரு. எது ரஜினிகாந்த் Sir உண்மை,” என்று ரஜினியை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரே வீடியோ… Rajini, சோ இருவரும் க்ளோஸ்… பங்கமாக கலாய்த்த DMK எம்பி!!

Thuglak Row: வீடியோவில் பழைய திரைப்படம் ஒன்றில் சோ ராமசாமி, துக்ளக் இதழை வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்.

Thuglak Row: சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் இதழின் 50 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், துக்ளக் 50வது ஆண்டு விழா மலரை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசிய பேச்சுதான் இப்போது தமிழக அரசியலின் ஹாட்-டாபிக்.

நடிகர் ரஜினிகாந்த் தனது சிறப்புரையின் போது, “சோ ஒரு ஜீனியஸ். ஜீனியஸ் என்பதை அடையாளப்படுத்த சில ஆண்டுகளாகும். தான் ஜீனியஸ் என்பதை நிரூபிக்க சோ எடுத்த துறை பத்திரிகைத் துறையாகும். அவரது ஆயுதம் துக்ளக். முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்று சொல்லிவிடலாம். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்லிவிடலாம். 

சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது; தற்போதைய சூழலில் சோ போன்ற பத்திரிகையாளர் அவசியம் தேவை. சோவை பெரிய ஆளாக்கியது பக்தவத்சலம், கலைஞர் ஆகிய இருவர்தான். எமர்ஜென்சியை எதிர்த்ததால் தேசிய அளவில் அறியப்பட்டார் சோ. சோவைப் போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி. 

கவலைகள் அன்றாடம் வரும்; அதை நிரந்திரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில்தான். கவலையை நிரந்தரமாக்கிக் கொண்டால் நோயாளி. தற்காலிகமாக்கிக் கொண்டால் அறிவாளி.

பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் தண்ணீரை கலந்துவிடக் கூடாது. பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும்” என பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் பேசி அமர்ந்தார். 

ரஜினி இப்படி பேசியிருக்க, திமுகவின் தர்மபுரி எம்பி, செந்தில் குமார், சோ மற்றும் ரஜினியை விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பழைய திரைப்படம் ஒன்றில் சோ ராமசாமி, துக்ளக் இதழை வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று, “இந்த பத்திரிகையா… என்ன எல்லாரையும் இப்படி திட்டுறான். இதைப் படிச்சிட்டிருந்தா நம்பள பைத்தியக்காரங்கனு சொல்லிடுவாங்க,” என்று சொல்லி அதை தூக்கி எறிகிறார்.

இந்த வீடியோவுடன் செந்தில்குமார், “ரஜினி Sir., நீங்க ஒன்னு சொல்லுறீங்க. ஆனா டீ கடை Owner சோ வேறு ஒன்னு சொல்லுராரு. எது ரஜினிகாந்த் Sir உண்மை,” என்று ரஜினியை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.

More News