ஈரோடு பட்டாசு விபத்தில் மூன்று பேர் பலி

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஈரோடு பட்டாசு விபத்தில் மூன்று பேர் பலி

ஈரோடு தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு விற்பனையாளர்கள் பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஈரோடு சாஸ்திரி நகரைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் பட்டாசு கட்டுகளை கொள்முதல் செய்து வீட்டில் இறக்கிக்கொண்டிருந்தார். இன்று காலை 6 மணிக்கு, வாகனங்களில் இருந்து இறக்கப்பட்ட பட்டாசு கட்டுகளில் ஒரு கட்டு திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.

உடனே, மற்ற கட்டுகளுக்கும் தீ பரவ ஆரம்பித்ததால், பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளன. இதனால், அந்த இடமே கடும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. பட்டாசுகள் வெடித்ததில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஈரோடு காவல் துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................