This Article is From Sep 28, 2019

மலைப் பாம்புகள் மூலம் மோடிக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பாடகி கைதாகிறார்!!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது பிரதமர் மோடியை மிரட்டும் வகையில் மலைப்பாம்புகள், முதலையுடன் பாகிஸ்தான் பாடகி ரபி பிர்சதா வீடியோ வெளியிட்டார்.

மலைப் பாம்புகள் மூலம் மோடிக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பாடகி கைதாகிறார்!!

பாகிஸ்தான் பாடகி ரபி பிர்சதா

Lahore:

மலைப்பாம்புகள் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்த பிரபல பாகிஸ்தான் பாடகி ரபி பிர்சதாவை கைது செய்ய லாகூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி நீக்கி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. காஷ்மீரை வைத்து அரசியல் செய்து வந்த பாகிஸ்தானுக்கு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை விரக்தியை ஏற்படுத்தியது. 

இந்தியாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு விஐபிக்கள் கண்டனம் வெளியிட்டனர். அதில் பாடகி ரபி பிர்சதாவின் கண்டனம் வித்தியாசமானதாகவும், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது. அவர் தனது வீட்டில் வளர்க்கும் சுமார் 10 மலைப் பாம்புகள், ஒரு முதலையுடன் வீடியோ எடுத்து அதன் மூலம் பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்தார். 

பாகிஸ்தானில் வன விலங்குகளை வீட்டில் வைத்திருப்பது சட்ட விரோதம் என்பதால், இதுதொடர்பாக பாகிஸ்தான் விலங்குகள் நல வாரியம் பாடகி ரபி பிர்சதாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. 

இந்த நிலையில் பிர்சதாவை கைது செய்ய லாகூர் நீதிமன்றம் வாரன்ட் அனுப்பியுள்ளது. விரைவில் அவர் கைதாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.