மாணவர்களின் கடின உழைப்புக்கு பரிசளிக்கும் பேராசிரியர்

இந்த ட்வீட் வைரலான பின் பொம்மை தயாரிப்பாளர் 100 மென்மையான பொம்மைகளை பேராசிரியருக்கு வழங்கினார்.

மாணவர்களின் கடின உழைப்புக்கு பரிசளிக்கும் பேராசிரியர்

சிறப்பாக பணிபுரியும் குழுவுக்கு இந்த பரிசு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி வெகுவாக வைரலாகிவிடும். இன்று ஒரு பல்கலைக்கழக பேராசிரியரின் செயல் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

அவர் தனது மாணவர்களின் கடின உழைப்புக்கு பரிசாக மிருதுவாக சிறிய பொம்மைகளை பரிசளிக்கிறார். ட்விட்டரில் ஆமி என்ற மாணவரொருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ 7.3 மில்லியனுகும் அதிகமான பார்வைகளை பெற்றது. ஆயிரக்கணக்கானோர் ரீ-ட்வீட் செய்துள்ளனர். 

இந்த பேராசிரியர் லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வியட்நாமிய மொழியை கற்பிக்கிறார். மாணவரின் பதிவின் படி வாராந்திர அசென்மெண்டுக்களில் ஒரு பகுதியாக வீடியோக்களை உருவாக்குவதும் அடங்கும்.  எங்களில் சிறப்பாக பணிபுரியும் குழுவுக்கு இந்த பரிசு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வீடியோவில் தனது பையிலிருந்து மென்மையான விலக்கு பொம்மைகளை தன் டேபிளில் வைப்பதைக் காணலாம். இந்த வீடியோவை ஆன்லைனில் பகிர்ந்தலிருந்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த ட்வீட் வைரலான பின் பொம்மை தயாரிப்பாளர் 100 மென்மையான பொம்மைகளை பேராசிரியருக்கு வழங்கினார்.

Click for more trending news


More News