ஒரு சிறிய கணக்குக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா..?- உங்களால தீர்க்க முடியுதான்னு பாருங்க!

ஒரே கணக்கிற்கு இரண்டு விடை வருவது குறித்தும் ஒரு ட்விட்டர் பயனர் விளக்கம் அளித்துள்ளார்

ஒரு சிறிய கணக்குக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா..?- உங்களால தீர்க்க முடியுதான்னு பாருங்க!

உங்களின் கணக்குப்படி, மேலே இருக்கும் கேள்விக்கு 16 என விடை வருகிறதா. அல்லது 1 என விடை வருகிறதா?

கணக்குப் பாடம் என்பது பலருக்கு சிறு வயதில் தூக்கத்தை இழக்க வைத்திருக்கும். ஆனால், அது அல்ஜீப்ரா, இன்டக்ரேஷன் போன்ற அதிக குழப்பமுடைய கணக்குப் பாடங்களுக்கே பொருந்தும். கூட்டல், கழித்தல் எல்லாம் கணக்குப் பாடத்தில் வீக் ஆனவர்கள் கூட அல்வா சாப்பிடுவது போல முடித்துவிடுவார்கள். ஆனால், இணையத்தில், 8 வகுத்தல் 2(2+2) என்ற ஒரு சாதாரண கணக்கு, பெரிய போரையே உருவாக்கியுள்ளது. பலர், இதுதான் சரியான பதில் என்று தங்களுக்குத் தெரிந்த பதிலை சொல்ல, அதற்கு இன்னொரு பக்கம், ‘கிடையவே கிடையாது, இதுதான் சரியான விடை' என்று முரண்டுபிடிக்கிறார்கள். இதனால், சாதரண கணக்கு சமாச்சாரம், இணையப் போராக உருவெடுத்துள்ளது.

உங்களால் இந்த கணக்கை தீர்க்க முடியுமா என்று பாருங்கள்:

உங்களின் கணக்குப்படி, மேலே இருக்கும் கேள்விக்கு 16 என விடை வருகிறதா. அல்லது 1 என விடை வருகிறதா?

அங்குதான் பிரச்னையே ஆரம்பமாகிறது. அதில் ஒரு முடிவே கிடைத்தபாடில்லை.

ஒரே கணக்கிற்கு இரண்டு விடை வருவது குறித்தும் ஒரு ட்விட்டர் பயனர் விளக்கம் அளித்துள்ளார்:

Click for more trending news