இந்த உணவகம் தான் உலகிலேயே பெஸ்ட்..!

வில்லியம் ரீட் மீடியா மூலம் ‘பிரிட்டிஷ் மேகசீன் ரெஸ்டாரன்ட்’ என்ற அமைப்பு, இந்த ‘சிறந்த 50 உணகங்களுக்கான பட்டியலை’ தயார் செய்கிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
இந்த உணவகம் தான் உலகிலேயே பெஸ்ட்..!

2002 முதல் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, சிறந்த உணவகங்கள் கவுரவிக்கப்பட்டு வருகின்றன. 


உலகின் சிறந்த 50 உணவகத்திற்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளது பிரான்சில் இருக்கும் ஒரு ரெஸ்டாரன்ட். அந்த உணவகத்தின் பெயர் ‘மிராசுர் ரெஸ்டாரன்ட்'. அதன் தலைமை செஃப், அர்ஜென்டினாவைச் சேர்ந்த மவ்ரோ கோலாக்ரீகோ. 

வில்லியம் ரீட் மீடியா மூலம் ‘பிரிட்டிஷ் மேகசீன் ரெஸ்டாரன்ட்' என்ற அமைப்பு, இந்த ‘சிறந்த 50 உணகங்களுக்கான பட்டியலை' தயார் செய்கிறது. 2002 முதல் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, சிறந்த உணவகங்கள் கவுரவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்தப் போட்டியில் எந்த உணவகம் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் பல்வேறு மூலைகளில் இருக்கும் செஃப், உணவக உரிமையாளர்கள், உணவு விமர்சகர்கள் மற்றும் பிற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், உணவகத் தேர்வில கலந்து கொண்டு வாக்களிக்கலாம். 

இந்த தேர்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் 10 ஓட்டுகள் தரப்படுகின்றன. ஒருவர், தங்கள் பகுதியில் இல்லாத நான்கு உணவகத்துக்கு கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்பது தேர்வில் ஒரு விதி. இப்படி பல விதிமுறைகள் இந்த தேர்வுக்கு இருந்தாலும், இதில் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. பல உணவு விரும்பிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள், இந்த தேர்வு முறையைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். காரணம், சிறந்த உணவகங்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறது என்பதில் போதிய தெளிவு இல்லை என்று சொல்லப்படுகிறது. 

தனது மிராசுர் உணவகம், முதலிடத்தைப் பிடித்தது குறித்து செஃப் மவுரோ கோலாக்ரீகோ, “நான் உச்சத்தில் இருக்கிறேன். இன்னும் நான் பூமியில் தரையிறங்கவில்லை. இந்த உணர்வை என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. 

எனது குழுவுக்கு நன்றி. 13 ஆண்டுகளாக நீடித்த இந்தப் பயணத்தில் இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................