This Article is From Nov 29, 2019

காலையில் டீ, காபி குடிக்காமல் வேலை பார்க்க மறுக்கும் போலீஸ் குதிரை!! Viral Video

பெண் பணியாளர் டி வைக்க, ஜேக் என்ற அந்த குதிரை டீயை உறிஞ்சிக் குடிக்கிறது. இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

காலையில் டீ, காபி குடிக்காமல் வேலை பார்க்க மறுக்கும் போலீஸ் குதிரை!! Viral Video

டீ குடிக்கும் குதிரை ஜேக்.

போலீசாருக்கு உதவியாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள குதிரை ஒன்று, காலையில் டீ அல்லது காபியை குடிமக்காமல் படுக்கையை விட்டு எழ மறுக்கிறது. இந்த குதிரை டீ குடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மனிதர்களில் சிலருக்குத்தான் காலையில் டீ, காபி குடிக்காவிட்டால் வேலை ஓடாது. அது விலங்குகளுக்கும் பொருந்தும் என்பதைத்தான் இங்கிலாந்தை சேர்ந்த போலீஸ் குதிரை ஒன்று நமக்கு சொல்லிக் காட்டுகிறது. 

இங்கிலாந்தில் மெர்சிசைட் போலீஸில் கண்காணிப்புக்காக குதிரை ஒன்று கடந்த 15 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குதிரைக்கு டீ, காபி என்றால் மிகவும் பிடிக்குமாம். 
 

.

.


20 வயதாகும் இந்தக் குதிரைக்கு காலையில் டீ அல்லது காபி கொடுத்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால், படுக்கையை விட்டு எழுந்திருக்காது என்று அதன் பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். 

பெண் பணியாளர் டி வைக்க, ஜேக் என்ற அந்த குதிரை டீயை உறிஞ்சிக் குடிக்கிறது. இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

.