வினோத ஐயர்ன் மேன் ஜெட் சூட் ; 30 கோடி ரூபாய் இருந்தால், ஐயர்ன் மேன் போல பறக்கலாம்

ஜெட் டீசல் அல்லது பெட்ரோலில் இயங்க கூடிய இந்த இயந்திரம், ஒரு மணி நேரத்தில் 32 மைல் தூரம் செல்ல கூடிய வேகம் பெற்றுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வினோத ஐயர்ன் மேன் ஜெட் சூட் ; 30 கோடி ரூபாய் இருந்தால், ஐயர்ன் மேன் போல பறக்கலாம்
London: 

 

லண்டன்: திரைப்படத்தில் கண்டுள்ள ஐயர்ன் மேன் போல நிஜத்திலும் பறக்க, 30 கோடி ரூபாய் செலவு செய்தால் போதும்

 

லண்டனில் விற்பனைக்கு வந்துள்ள ஐயர்ன் மேன் ஜெட் சூட் 340,000 பவுண்ட்ஸ், அதாவது 30 கோடி ரூபாய் விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. கிராவிட்டி தொழிற்சாலை தயாரித்துள்ள ஐயர்ன் மேன் ஜெட் சூட்டில், ஐந்து மினியேச்சர் ஜெட் இன்ஜின்கள், 3டி ப்ரிண்டட் பாகங்கள் கொண்டுள்ளது

 

ஜெட் டீசல் அல்லது பெட்ரோலில் இயங்க கூடிய இந்த இயந்திரம், ஒரு மணி நேரத்தில் 32 மைல் தூரம் செல்ல கூடிய வேகம் பெற்றுள்ளது. 12,000 அடி உயரத்தில் பறக்கும் வசதி கொண்டுள்ளது. எனினும், தரையில் இருந்து சில அடி தூரங்களில் பயணிப்பது பாதுகாப்பானது என்று இந்த ஜெட் சூட் வடிவமைப்பாளர் ரிச்சர்ட் பிரவுன் தெரிவித்துள்ளார்

 

இந்த ஜெட் சூட் வாங்க விருப்பமுள்ளவர்களுக்கு முறையாக பயிற்சி முதலில் அளிக்கப்படும் என்று ரிச்சர்டு தெரிவித்தார். இனி ஐயர்ன் மேன் ரசிகர்கள் இந்த ஜெட் சூட்டை வாங்க மறக்கமாட்டார்கள்.

(Reporting by Lisa Keddie; Writing by Marie-Louise Gumuchian; Editing by Gareth Jones)

© Thomson Reuters 2018


(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

பிற மொழிக்கு | Read In

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................