புகை பிடிக்காத ஊழியர்களுக்கு கூடுதலாக 6 நாள் சம்பளத்துடன் விடுமுறை வழங்கும் நிறுவனம்

டோக்கியோவை தளமாகக் கொண்ட சந்தைப்படுத்தும் நிறுவனமான பியாலா இன்க் நிறுவனம் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

புகை பிடிக்காத ஊழியர்களுக்கு கூடுதலாக 6 நாள் சம்பளத்துடன் விடுமுறை வழங்கும் நிறுவனம்

புகைபிடிக்காத ஊழியர்களுக்கு ஆறு நாட்கள் கூடுதலாக சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும் (Representative Image)

ஜப்பானில் உள்ள ஒரு நிறுவனம் தன் பணியாளர்களில் புகைப்பிடிக்காதவர்களுக்கு கூடுதலாக ஆறு நாட்கள் விடுமுறை வழங்குகிறது. டோக்கியோவை தளமாகக் கொண்ட சந்தைப்படுத்தும் நிறுவனமான பியாலா இன்க் நிறுவனம் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஒரு ஊழியர் புகைபிடிப்பதை நிறுத்தும் போது ஏற்படும் உளவியல் சிக்கலினால் உற்பத்தி திறன் பாதிக்கும் என்று புகார் அளித்ததையடுத்து அந்நிறுவனம் கூடுதல் விடுமுறையை அறிவித்துள்ளது. 

நிறுவனத்தின் அலுவலகம் 29வது மாடியில் உள்ளது சிகரெட் பிடிக்க வேண்டுமென்றால் கீழ்த்தளத்திற்கு செல்ல வேண்டும். இதற்கு குறைந்தது 15 நிமிடங்கள் பிடிக்கும். இதனால் புகை பிடிக்கும் ஊழியர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புகாரைப் பற்றி கேள்விபட்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, புகைபிடிக்காத ஊழியர்களுக்கு ஆறு நாட்கள் கூடுதலாக சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  அபராதம் அல்லது வற்புறுத்தலுக்கு பதிலாக ஊக்கத் தொகை மூலம் புகைப்பழக்கத்தை கைவிட இந்த விடுமுறை நள் உதவும் என்று நம்புவதாக நிர்வாக அதிகாரி தெரிவித்தார். 

ஜப்பானில் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு பெரும்பாலான பார்கள் மற்றும் உணவகங்கள் வாடியக்கையாளர்களை புகைபிடிக்க அனுமதிக்கின்றன. கடந்த ஆண்டு டோக்கியோ நகர அரசு 2020 ஒலிம்பிற்கு முன்னதாக புகை பிடிப்பதற்கு எதிரான கடுமையான விதிகளை நிறைவேற்றியுள்ளது. 

Click for more trending news


More News