சபாநாயகரை நீக்கக் கோரும் தீர்மானம்: சட்டசபை செயலருக்கு கருணாஸ் கடிதம்!

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்

சபாநாயகரை நீக்கக் கோரும் தீர்மானம்: சட்டசபை செயலருக்கு கருணாஸ் கடிதம்!

கருணாஸ் எம்.எல்.ஏ

தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலை, பதிவியிலிருந்து நீக்க தீர்மானம் கொண்டு வருவதற்கு அனுமதி கோரியுள்ளார் எம்.எல்.ஏ கருணாஸ். இதற்கான அனுமதி கோரி, கருணாஸ், சட்டசபை செயலருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதியன்று சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழக முதலமைச்சர், சென்னை காவல்துறை அதிகாரிகளை தாக்கி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவரது பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அவர் பிணையில் வெளியே வந்தார்.

இந்நிலையில் அவர் சபாநாயகர் தனபாலுக்கு எதிராக கடிதம் எழுதியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com